அரசுப் பள்ளிகளில் வரலாற்று சாதனை: அமைச்சர் செங்கோட்டையன் பெருமிதம் - Asiriyar.Net

Post Top Ad


Saturday, November 7, 2020

அரசுப் பள்ளிகளில் வரலாற்று சாதனை: அமைச்சர் செங்கோட்டையன் பெருமிதம்

 

தமிழகத்தில் 5 லட்சத்துக்கு 18 ஆயிரம் பேர் தனியார் பள்ளிகளில் இருந்து விலகி, அரசுப் பள்ளிகளில் சேர்ந்து சாதனை படைத்துள்ளதாகப் தெரிவித்துள்ளார்.


தனியார் பள்ளிகளுக்கு அரசு அங்கீகார ஆணை வழங்கும் நிகழ்ச்சி இன்று திருநெல்வேலியில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு ஆணைகளை வழங்கினார். அதைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது, ”தமிழ்நாட்டின் வரலாற்றில் 5 லட்சத்துக்கு 18 ஆயிரம் பேர் தனியார் பள்ளிகளில் இருந்து விலகி, அரசுப் பள்ளிகளில் சேர்ந்துள்ள சாதனை, நம்முடைய முதல்வர் காலத்தில் நடந்துள்ளது. இது மகிழ்ச்சி தரக்கூடிய ஒன்று.சிபிஎஸ்இ பள்ளிகளின் பாடத் திட்டத்தைக் காட்டிலும் அரசுப் பள்ளிகளின் பாடத்திட்டம் சிறப்பாக உள்ளதை மக்கள் பாராட்டுகிறார்கள். தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் டிசம்பர் மாத இறுதிக்குள் 7,200 ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைக்கப்படும். 80 ஆயிரம் கரும்பலகைகளை மாற்றி ஸ்மார்ட் போர்டு அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.7.5 சதவீத இட ஒதுக்கீடு மூலம் 303 அரசுப்பள்ளி மாணவர்கள் மருத்துவப் படிப்புகளில் சேர முடியும்.


பள்ளிகள் திறப்புக் குறித்து அரசு, அரசு உதவிபெறும், தனியார் பள்ளிகளில் கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்தப்படும். பெற்றோரின் கருத்துகள் வந்தபிறகுபள்ளிகளைத் திறப்பது குறித்து முதல்வர் முடிவெடுப்பார்” என்று தெரிவித்தார்.

Recommend For You

Post Top Ad