பள்ளிகள் திறப்பு - முதல்வர் ஆலோசனை - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Wednesday, November 4, 2020

பள்ளிகள் திறப்பு - முதல்வர் ஆலோசனை

 






பள்ளி,  கல்லூரிகள் நவம்பர் 16ல் திறக்க எதிர்ப்பு எழுந்துள்ள நிலைையில் திறப்பு குறித்து தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஆலோசனை நடத்தி வருகிின்றார்.


பள்ளி திறப்பு பற்றி வரும் 9 ஆம் தேதியன்று கருத்துக்கேட்புக்கூட்டம் நடத்தப்படும். நேரில் வர இயலாய பெற்றோர்கள் கடிதம் மூலம் கருத்து தெரிவிக்கலாம் என தமிழக அரசு அறிவிப்பு.


தமிழகத்தில் நவ.16-ல் பள்ளிகளை திறக்கலாமா? தள்ளி வைக்கலாமா? என்பது குறித்து அமைச்சர்களுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். தமிழகத்தில் மார்ச் மாதம் பிளஸ் 2 தேர்வுகள் நடந்து கொண்டு இருந்தபோதே நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவத் தொடங்கியது. பிளஸ் 2 தேர்வின் இறுதி நாளான அன்று தொற்றின் வேகம் அதிகரித்தது. தேர்வு முடிந்த மறுநாளான  மார்ச் 25ம் தேதி முதல் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, ஏப்ரல் மாதம் நடக்க இருந்த பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முற்றிலும் ரத்து செய்யப்பட்டது. அதன் தொடர்ச்சியாக கீழ் வகுப்புகளுக்கும் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டது.  பள்ளிகளுக்கும் காலவரையற்ற விடுமுறை அறிவிக்கப்பட்டது.



பின்னர் படிப்படியாக ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால், தமிழகத்தில் அனைத்து கல்லூரிகளும், 9,10,பிளஸ்1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு மட்டும் பாடம் நடத்தும் வகையில் பள்ளிகளும் நவம்பர் 16ம் தேதி முதல் திறக்கப்படும் என்று தமிழக அரசு  அறிவித்துள்ளது. இருப்பினும், கொரோனா தொற்று முற்றிலும் முடிவுக்கு வராத நிலையில் தங்கள் பிள்ளைகளை பள்ளி, கல்லூரிகளுக்கு அனுப்ப முடியாது என்ற பெற்றோர் ஒட்டுமொத்தமாக மறுத்து வருகின்றனர். தமிழக அரசின் பள்ளி  திறப்பு அறிவிப்பிற்கு எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். 


இந்நிலையில், தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகள் திறப்பு தொடர்பாக சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சர்களுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். ஆலோசனை கூட்டத்தில் பள்ளிக்கல்வித்துறை  அமைச்சர் செங்கோட்டையன், உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் மற்றும் அதிகாரிகளுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். ஆலோசனை கூட்டம் நிறைவடைந்தப்பின் பள்ளிகளை திறக்கலாமா?  இல்லை தள்ளி வைக்கலாமா? என்பது குறித்து அரசு அறிவிப்பு வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.




பள்ளி திறப்பு பற்றி வரும் 9 ஆம் தேதியன்று கருத்துக்கேட்புக்கூட்டம் நடத்தப்படும். நேரில் வர இயலாய பெற்றோர்கள் கடிதம் மூலம் கருத்து தெரிவிக்கலாம் என தமிழக அரசு அறிவிப்பு.

Post Top Ad