ஆசிரியர்கள், அரசு பணியாளர்களுக்கு சட்டமன்ற தேர்தல் பணி ஒதுக்கீடு செய்யும் நடவடிக்கை தொடக்கம்! - Asiriyar.Net

Post Top Ad


Tuesday, November 17, 2020

ஆசிரியர்கள், அரசு பணியாளர்களுக்கு சட்டமன்ற தேர்தல் பணி ஒதுக்கீடு செய்யும் நடவடிக்கை தொடக்கம்!

 


ஆசிரியர்கள் மற்றும் அரசு பணியாளர்களுக்கு சட்டமன்ற தேர்தல் பணி ஒதுக்கீடு செய்யும் நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவை தேர்தலுக்கான பணிகளை தற்போது தமிழக அரசு தொடங்கியிருக்கிறது. அதற்கான முன்னேற்பாடுகளில், தேர்தல் ஆணையம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. பெரும்பாலும் தேர்தலை முழுமையாக நடத்தி முடிப்பவர்கள் அரசு துறையில் பணிபுரியும் ஆசிரியர்கள், அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் தான். வாக்குசாவடிகளில் முக்கிய பணிகளில் ஆசிரியர்களைத்தான் பயன்படுத்துகிறார்கள். இந்நிலையில், சட்டமன்ற தேர்தல் பணியில் ஈடுபடும் ஆசிரியர்களின் விவரங்கள் சேகரிக்கப்படுகின்றன. இதற்கான பிரத்யேக விண்ணப்பங்கள் தலைமையாசிரியர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. 
தொடர்ந்து, ஆசிரியர்கள் மற்றும் அரசு பணியாளர்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டு இந்த மாத இறுதிக்குள் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் ஒப்படைக்க வேண்டும் என தேர்தல் அலுவலர் பொறுப்பு வகிக்கும் மாவட்ட ஆட்சி தலைவர்கள் உத்தரவிட்டுள்ளனர். தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி மாவட்ட ஆட்சி தலைவர்கள் தேர்தல் பணிகளை முதற்கட்டமாக துவக்கியுள்ளனர். 


அடுத்த ஆண்டு மே மாதத்தில் சட்டமன்ற தேர்தல் நடக்க வாய்ப்புள்ள நிலையில் ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வரும் 2021ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. இதையொட்டி வாக்காளர் பட்டியல் தயார் செய்யும் பணிகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Recommend For You

Post Top Ad