7.5% உள் ஒதுக்கீடு - மாணவர்கள் விண்ணப்பிக்கும் வழிமுறைகள் பள்ளிக்கல்வித்துறை வெளியீடு. - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Thursday, November 5, 2020

7.5% உள் ஒதுக்கீடு - மாணவர்கள் விண்ணப்பிக்கும் வழிமுறைகள் பள்ளிக்கல்வித்துறை வெளியீடு.

 






NEET நுழைவுத் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் அரசுப் பள்ளியில் 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை படித்த மாணவ மாணவிகளுக்கு மருத்துவ படிப்புகளில் 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு அரசால் ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது . அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவப் படிப்பிற்கு விண்ணப்பிக்க மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் கீழ்கண்ட அறிவுரைகளை பின்பற்றி செயல்படுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்





 NEET நுழைவுத் தேர்வு எழுதி தகுதி பெற்றுள்ள அரசுப்பள்ளியில் 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை படித்த மாணவர்கள் மருத்துவ படிப்பில் சேருவதற்கு மருத்துவக் கல்வி இயக்ககத்தால் அறிவிக்கப்பட்டுள்ளதின் படி 12.11.2020 அன்று மாலை 5 மணிக்குள் இணையதள வாயிலாக விண்ணப்பிக்க தலைமையாசிரியர்கள் சார்ந்த மாணவர்களுக்கு உரிய வழிகாட்டுதலை வழங்க வேண்டும்.




> அரசு பள்ளி என்பது அரசு பள்ளிகள் , மாநகராட்சி பள்ளிகள் , நகராட்சி பள்ளிகள் , ஆதிதிராவிடர் , பழங்குடியினர் நலப்பள்ளிகள் , கள்ளர் சீர்மரபின பள்ளிகள் , வனத்துறை பள்ளிகள் , சமூக பாதுகாப்பு துறை uoltof soin ( Borstal Schools ) ஆகியவை உட்பட்டதாகும்.



Click Here To Download - DSE - NEET Instructions - Pdf

Post Top Ad