7.5% ஒதுக்கீடு - ஒரு வகுப்பை வேறு பள்ளியில் படித்தாலும் உரிமை கோர முடியாது - ஐகோர்ட் உத்தரவு - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Friday, November 20, 2020

7.5% ஒதுக்கீடு - ஒரு வகுப்பை வேறு பள்ளியில் படித்தாலும் உரிமை கோர முடியாது - ஐகோர்ட் உத்தரவு

 





மருத் துவ கல்வியில் 7.5 சத வீத உள் இடஒதுக்கீடு 6 முதல் பிளஸ் 2 வரை அரசுப் பள்ளியில் முழுமையாக படித்த மாணவர்களுக்குத்தான் , ஒரு வகுப்பை வேறு பள்ளியில் படித்தாலும் உரிமை கோர முடியாது என ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது . 


தஞ்சை மாவட்டம் , பட்டுக்கோட்டை அருகே பள்ளிஓடவயல் கிராமத்தை சேர்ந்த அறிவழகன் , ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு : 


என் மகள் அறிவிகா . நாவக்கொல்லையிலுள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் 5 ம் வகுப்பு வரை படித்தார் . அங்கு மேல்நிலைப்பள்ளி இல்லாததால் , புனவாச லில் உள்ள அரசு உதவி பெறும் சிறுபான்மை பள்ளியில் 6 ம் வகுப்பு படித்தார் . பின்னர் பேராவூரணியில் உள்ள  அரசு பெண்கள் மேல் நிலைப்பள்ளியில் 7 ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படித்தார் . 10 ம் வகுப்பில் 467 மதிப் பெண் பெற்று தமிழக அரசின் காமராஜர் விருது பெற்றார் . பிளஸ் 2 வில் 453 மதிப்பெண் பெற்றுள்ளார் . 



மருத் துவராக வேண்டும் என்ற லட்சியத்தால் நீட் தேர்வில் பங்கேற்றார் . இதில் 270 மதிப்பெண் பெற்றார் . ) தற்போது அரசுப் பள்ளி மாணவர்க களுக் கான 7.5 சதவீத உள் ட ஒதுக்கீட்டின்படி என் மகளுக்கு மருத்துவ சேர்க்கையில் இடம் கிடைக்க வாய்ப்பு உள் இதில் 6 ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை அரசுப் பள்ளியில் படித்தவர்களுக்கு மட் டுமே உள் இடஒதுக்கீடு பொருந்தும் என கூறப் பட்டுள்ளது . ஆனால் , எம் வகுப்பு மட்டும் அரசு உதவி பெறும் பள் ளியில் படித்துள்ளதால் , சீட் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது . 


எனவே , என் மகள் 6 ம் வகுப்பு படிப்பை யும் அரசுப் பள்ளியில் படித்ததாக கருதி , மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான தரவ ரிசைப்பட்டியலில் என் மகளின் பெயரை சேர்க்கவும் , அவருக்காக ஒரு இடத்தை காலியாக வைத்திருக்கவும் உத்தர விட வேண்டும் . ) இவ்வாறு மனுவில் கூறியிருந்தார் . 



இந்த மனுவை நீதிய திகள் என்.கிருபாகரன் , பி.புகழேந்தி ஆகியோர் நேற்று விசாரித்தனர் . அப்போது கூடுதல் அட்வகேட் ஜெனரல் செல்லப்பாண்டியன் ஆஜராகி , 6 ம் வகுப்பு முதல் 12 ம் வகுப்பு வரை முழுமையாக அரசுப்பள்ளியில் படித்தவர்களுக்கு மட் டுமே உள் இட ஒதுக் கீடு வழங்க முடியும் , மனுதாரரின் மகள் எம் வகுப்பை அரசு உதவி பெறும் பள்ளியில் படித்துள்ளார் . 


எனவே , அவர் உள்இட ஒதுக் கீடு சலுகையை கோர முடியாது ” என்றார் . இதையடுத்து நீதிபதிகள் , அரசா ணைப்படி , 7.5 சதவீத உள் இடஒதுக்கீடு என் பது முழுமையாக அர சுப்பள்ளியில் பயின்ற மாணவர்களுக்கானது . இதை மனுதாரர் உரிமை கோரமுடியாது . எனவே , இந்த மனு தள் ளுபடி செய்யப்படுகிறது என உத்தரவிட்டுள் ளனர் .

Post Top Ad