துணை மருத்துவ படிப்புகளுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்: சுகாதாரத்துறை அறிவிப்பு - Asiriyar.Net

Post Top Ad


Friday, October 2, 2020

துணை மருத்துவ படிப்புகளுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்: சுகாதாரத்துறை அறிவிப்பு

 


தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லுாரிகளில் உள்ள, பி.எஸ்சி., நர்சிங், பி.பார்ம் உள்ளிட்ட, 17 துணை மருத்துவ படிப்புகளில் சேர 2020 - 21 கல்வி ஆண்டில் சேர மாணவர்கள் சேர விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தை பூர்விகமாக கொண்ட மாணவர்கள் tnhealth.tn.gov.in மற்றும் tnmedicalselection.net என்ற இணையதளத்தில் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்யலாம். விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்ய அக்., 15ம் தேதி கடைசி நாள். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை செயலர், தேர்வுக்குழு, 162, ஈ.வே.ரா.பெரியார் நெடுஞ்சாலை, கீழ்ப்பாக்கம், சென்னை, 10 என்ற முகவரிக்கு தபால் வாயிலாக அக். 17ம் தேதி மாலை 5 மணிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.


விண்ணப்ப கட்டணம் ரூ. 400. இதைத்தவிர்த்து தேசியமயமாக்கப்பட்ட வங்கியில், ‘The secretary, selection committee, kilpauk, chennai  10’ என்ற பெயரில் வரைவோலையாகவும் செலுத்தலாம். மேலும் விபரங்களுக்கு, 98842 24648; 98842 24649; 98842 24745; 98842 24746  என்ற எண்ணிலும், paramedicalselection@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.


Recommend For You

Post Top Ad