ஆசிரியர்களின் சான்றிதழ்களை சரிபார்க்க உத்தரவு - இயக்குநர் செயல்முறைகள் - Asiriyar.Net

Post Top Ad


Friday, October 23, 2020

ஆசிரியர்களின் சான்றிதழ்களை சரிபார்க்க உத்தரவு - இயக்குநர் செயல்முறைகள்

 


அரசு / நகராட்சி மேல்நிலைப்பள்ளிகளில் தமிழ்நாடு மேல்நிலைக் கல்விப்பணி சிறப்பு விதிகளின்கீழ் உள்ள முதுகலை ஆசிரியர் / உடற்கல்வி இயக்குநர் நிலை -1 / சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளராக பணிபுரியும் ஆசிரியர்களின் விவரங்களை அனுப்பி வைத்திட அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டது.
 இதன்படி இவ்வாசிரியர் சார்ந்த விவரங்களை தயார் செய்யும் பொழுது அவர்களுக்கு நேரடி நியமனம் / பதவி உயர்வு வழங்கப்பட்ட ஆணையின் நகல் , பணிவரன்முறை / தகுதிகாண்பருவம் செய்யப்பட்ட ஆணையின் நகல் மற்றும் அவர்களின் கல்விச் சான்றிதழ்களின் நகல்களை நகல்களை பெற்று அவற்றின் அடிப்படையில் அடிப்படையில் சரிபார்த்து படிவத்தினை முழுமையாக ஆங்கிலத்தில் ( Excel format ) பூர்த்தி செய்து 23.10.2020 க்குள் W3 பிரிவு ( w3sec.tndse@nic.in ) மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவிட்டு , அதன் நகலினை முதன்மைக்கல்வி அலுவலரின் கையொப்பத்துடன் இணை இயக்குநர் ( மேல்நிலைக் கல்வி ) அவர்களின் பெயரிட்ட முகவரிக்கு உடனடியாக அனுப்பி வைக்கப்பட வேண்டும் எனவும் , ஆசிரியர்களிமிருந்து பெறப்படும் சான்றிதழ்களின் நகல்களை முதன்மைக் கல்வி அலுவலகத்தில் பராமரிக்கப்பட வேண்டும் எனத் அறிவுறுத்தப்படுகிறது.


மேலும் , இதில் ஏதும் தவறு ஏற்படின் அதற்கு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களே முழுப்பொறுப்பேற்க வேண்டும் எனத் தெரிவிக்கப்படுகிறது.


Recommend For You

Post Top Ad