சத்துணவு அமைப்பாளர் பணியிடங்களுக்கு தேர்வு நடைமுறை நிறுத்தி வைக்கப்படுகிறது - தமிழக அரசு - Asiriyar.Net

Post Top Ad


Thursday, October 8, 2020

சத்துணவு அமைப்பாளர் பணியிடங்களுக்கு தேர்வு நடைமுறை நிறுத்தி வைக்கப்படுகிறது - தமிழக அரசு

 
தமிழக அரசு இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, தமிழ்நாடு முழுவதும் சமூக நலம் மற்றும் சத்துணவு திட்டத் துறையில் ஏற்பட்டுள்ள சத்துணவு அமைப்பாளர், சமையலர் மற்றும் சமையல் உதவியாளர் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கு அந்தந்த மாவட்ட ஆட்சியர்களால் அறிவிக்கை வெளியிடப்பட்டு, விண்ணப்பங்கள் பெறப்பட்டு, நேர்காணல் உள்ளிட்ட தேர்வுப் பணிகள் நடைபெற உள்ளன.


இப்பணிகளுக்கு மிக அதிக அளவில் மனு பெறப்படுவதால், நேர்காணல் தேர்வு பணிகளில் மனுதாரர்கள் அதிக எண்ணிக்கையில் கலந்து கொள்வதற்கான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.


கொரோனா நோய் தொற்று பரவல் முற்றிலும் நீங்காத நிலையில், நோய்த் தொற்றை கட்டுப்படுத்தும் நோக்குடன், சத்துணவு அமைப்பாளர் உள்ளிட்ட பணியிடங்களுக்கான தேர்வு நடைமுறைகள் அரசால் நிறுத்தி வைக்கப்படுகிறது.

Recommend For You

Post Top Ad