கொரோனா தொற்றால் பாதிப்பு; ஆம்புலன்சில் தேர்வு எழுதிய மாணவர் - Asiriyar.Net

Post Top Ad


Thursday, October 8, 2020

கொரோனா தொற்றால் பாதிப்பு; ஆம்புலன்சில் தேர்வு எழுதிய மாணவர்

 
கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டம் அர்ப்போகரா பகுதியை சேர்ந்த மாணவர் ஒருவர் திருநாக்கரா பகுதியில் உள்ள கல்லூரியில் டிப்ளமோ படித்து வருகிறார். அவரது படிப்பிற்கான இறுதி தேர்வுகள் தொடங்கியது. தேர்வுக்கு தயாராகி வந்த நிலையில் அந்த மாணவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது.இதையடுத்து கொரோனா சிகிச்சை மையத்தில் மாணவர் சேர்க்கப்பட்டார். இதனால் அவர் தேர்வு மையத்திற்கு சென்று தேர்வு எழுத முடியாத நிலை ஏற்பட்டது. ஆனால் அவர் தேர்வு எழுத விருப்பம் தெரிவித்ததையடுத்து அவரை ஆம்புலன்சில் வைத்து தேர்வு எழுத வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.


அதன்படி அந்த மாணவர் சிறப்பு பாதுகாப்பு அம்சங்கள் கொண்ட ஆம்புலன்சில் தேர்வு நடந்த மையத்திற்கு அழைத்து செல்லப்பட்டார். அங்கு தேர்வுக்கான வினாத்தாளை மாணவரிடம் வழங்கப்பட்டது. இதையடுத்து மாணவர் ஆம்புலன்சுக்குள் அமர்ந்து தேர்வு நேரமான 11 மணி முதல் 1 மணி வரை தேர்வு எழுதினார். அவர் எழுதிய விடைத்தாள் பாதுகாப்பாக வைக்கப்பட்டு தேர்வு கண்காணிப்பாளரிடம் வழங்கப்பட்டது. தேர்வு முடிந்ததும் மாணவர் அங்கிருந்து மீண்டும் ஆஸ்பத்திரிக்கு ஆம்புலன்சில் அழைத்து செல்லப்பட்டார்.

Recommend For You

Post Top Ad