அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு அவகாசம் நீட்டிப்பு: அமைச்சர் செங்கோட்டையன் - Asiriyar.Net

Post Top Ad


Friday, October 2, 2020

அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு அவகாசம் நீட்டிப்பு: அமைச்சர் செங்கோட்டையன்

 


அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது என்று கோபிச்செட்டிப்பாளையம் அருகே வெள்ளாங்கோவிலில் நலத்திட்ட உதவிகளை வழங்கி வரும் நிகழ்வில் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். மேலும், ஆர்.டி.ஐ.-ன் கீழ் மாணவர் சேர்க்கைக்கான அவகாசம் குறித்து மத்திய அரசு தான் முடிவு செய்ய வேண்டும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று காரணமாக பள்ளிகள் திறப்பு குறித்து இன்னும் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என கூறினார். 2020-21-ம் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கையை அனைவரும் எதிர்பார்த்து இருந்த நிலையில், ஆகஸ்ட் 17 முதல் மாணவர் சேர்க்கை அனைத்து வகையான பள்ளிகளிலும் தொடங்கி இருக்கிறது. 
1-ம் வகுப்பு முதல் எஸ்.எஸ்.எல்.சி. வரையில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. கொரோனா தொற்றை கருத்தில்கொண்டு அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற அரசு உத்தரவிட்டுள்ளது. அதனை பின்பற்றி பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இதுதவிர தனியார் பள்ளிகளிலும் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. கொரோனா காரணமாக பள்ளிகள் திறப்பதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது. இருப்பினும் பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன், கல்வி தொலைக் காட்சி வாயிலாக பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. தற்போது பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை என்பதால் ஆன்லைன் வகுப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.Recommend For You

Post Top Ad