குறைக்கப்பட்ட40 சதவீதம் பாடங்கள் எவை என்பதை அறிவிக்க வேண்டும் - ஆசிரியர் சங்கம் வேண்டுகோள் - Asiriyar.Net

Post Top Ad


Sunday, October 18, 2020

குறைக்கப்பட்ட40 சதவீதம் பாடங்கள் எவை என்பதை அறிவிக்க வேண்டும் - ஆசிரியர் சங்கம் வேண்டுகோள்

 


மாணவர்களின் நலன்கருதி குறைக்கப்பட்ட40 சதவீதம் பாடங்களை எவை எவையென்று அறிவிக்க தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் வேண்டுகோள்.

மாநிலத்தலைவர் பி.கே.இளமாறன் அறிக்கை.கொரோனா பெருந்தொற்று நடவடிக்கையாக 2020-21 ஆம் கல்விஆண்டு பள்ளிகள் இன்னும் திறக்கப்படவில்லை. உயிரா படிப்பா என்றால் உயிர்தான் முக்கியம். சுவர் இருந்தால்தான் சித்திரம் வரையமுடியும் என்ற அடிப்படையில் மாற்று ஏற்பாடாக கற்றல் பணி பாதிக்கப்படாத வகையில் தொலைக்காட்சி வாயிலாக பாடம் எடுக்கப்பட்டுவருவது தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் வரவேற்கிறது. மேலும் இந்த நெருக்கடியான சூழலில் மாணவர்களின் மனநிலையறிந்து பாடச் சுமையை குறைக்கும் வகையில் இந்த கல்வியாண்டில் 40 சதவீதம் பாடத்திட்டங்கள் குறைக்கப்படும் என்ற பள்ளிக்கல்வித்துறையின் அறிவிப்பு மகிழ்ச்சியளிக்கிறது.

ஆனால் குறைக்கப்பட்டப் பாடங்கள் எவை எவையென்று அறிவிக்கப்படாததால் எதை படிப்பது என்று மாணவர்கள் குழப்பத்தில் உள்ளார்கள்.எனவே எந்தெந்த பாடங்கள் குறைக்கப்பட்டிருக்கிறது என்ற விவரங்களை மாணவர்களின் நலன்கருதி வெளியிட்டு உதவிட ஆவனசெய்யும்படி மாண்புமிகு.முதல்வர்அவர்களை தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் பணிவுடன் வேண்டுகின்றேன் என

மாநிலத்தலைவர் பி.கே.இளமாறன் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Recommend For You

Post Top Ad