‘நவம்பர் 30ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு’ – புதிய தளர்வுகள் மத்திய அரசு அறிவிப்பு! - Asiriyar.Net

Post Top Ad


Tuesday, October 27, 2020

‘நவம்பர் 30ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு’ – புதிய தளர்வுகள் மத்திய அரசு அறிவிப்பு!

 கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகளில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் வரும் நவ.30ம் தேதி வரை நீடிக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.


இந்தியாவில் கொரோனா பாதிப்பு குறைந்து வருவதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்து வருகிறது. கடந்த மாதத்தில் நாளொன்றுக்கு கிட்டத்தட்ட 60 ஆயிரம் முதல் 90 ஆயிரம் வரை மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வந்த நிலையில், இந்த மாதம் கொரோனா பாதிப்பு 50 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்துள்ளது. குறிப்பாக கடந்த 24 மணி நேரத்தில் 36,469 பேருக்கு மட்டுமே கொரோனா உறுதியாகியது.

இதனால் கொரோனா பாதிப்பு குறைந்து வருவது தெளிவாக தெரிந்தாலும், பண்டிகைகள் நெருங்குவதால் மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், கொரோனா நோய்க் கட்டுப்பாட்டு பகுதியில் நவ.30 வரை ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீடிக்கப்படுவதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
மாநிலங்களுக்கு இடையேயான போக்குவரத்துக்கு தனிநபர் அனுமதி, அதிகாரிகள் ஒப்புதல் மற்றும் இ பாஸ் உள்ளிட்ட எவ்வித முன் அனுமதி பெற வேண்டிய அவசியம் இல்லை என்றும் செப்.30 ஆம் தேதி அறிவிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் நவ.30 வரை தொடரும் என்றும் தெரிவித்துள்ளது.

Recommend For You

Post Top Ad