தள்ளிப்போகிறது 10, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு - பள்ளி கல்வித்துறை ஆலோசனை - Asiriyar.Net

Post Top Ad


Monday, October 5, 2020

தள்ளிப்போகிறது 10, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு - பள்ளி கல்வித்துறை ஆலோசனை

 

தமிழக பாட திட்டத்தில் 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வை இரு மாதங்கள் தள்ளிவைக்க பள்ளி கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. இது குறித்து நிபுணர் குழு அமைத்து ஆய்வு செய்யப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.


கொரோனா பரவல் காரணமாக 2019 - 20ம் கல்வி ஆண்டில் பள்ளி கல்லுாரி மாணவர்களுக்கு இறுதியாண்டு தேர்வை நடத்த முடியாமல் பெரும் சிக்கல் ஏற்பட்டது.தற்போதைய புதிய கல்வி ஆண்டிலும் இன்னும் பள்ளிகள், கல்லுாரிகளை திறந்து வகுப்புகளை நடத்த முடியவில்லை. நடப்பு கல்வி ஆண்டில் மாணவர்களுக்கான வகுப்புகள் தாமதமாகியுள்ள நிலையில் குறிப்பிட்ட காலத்துக்குள் பாடங்களை முடிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு தேர்வும் முதல் பருவ தேர்வும் இன்னும் நடத்தப்படவில்லை. தனியார் பள்ளிகளில் மட்டும் பருவ இடைத்தேர்வு ஆன்லைனில் நடத்தப்படுகிறது. இந்நிலையில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கு திட்டமிட்டபடி மார்ச்சில் பொதுத்தேர்வு நடத்த முடியாத நிலை உள்ளது. உயர்நிலை படிப்புகளான இன்ஜினியரிங், மருத்துவம், சட்டம், மீன்வளம், வேளாண்மை உள்ளிட்ட அனைத்து துறைகளுக்கும் பிளஸ் 2 பாடங்களே அடிப்படை என்பதால் அந்த பாடங்களை மாணவர்கள் கட்டாயம் படிக்க வேண்டிய நிலை உள்ளது.


Recommend For You

Post Top Ad