இன்று (04.10.2020) அரசு அலுவலகங்களில் தேசியக்கொடி அரைக் கம்பத்தில் பறக்க விட வேண்டும் - தமிழக அரசு உத்தரவு - Asiriyar.Net

Post Top Ad


Sunday, October 4, 2020

இன்று (04.10.2020) அரசு அலுவலகங்களில் தேசியக்கொடி அரைக் கம்பத்தில் பறக்க விட வேண்டும் - தமிழக அரசு உத்தரவு

 
குவைத் மன்னர் ஷேக் சபா அல் அஹமத் மறைவுக்கு தமிழக அரசு சார்பில் ஒரு நாள் துக்கம் அனுசரிக்கப்படும் என்று தலைமை செயலாளர் சண்முகம் அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

குவைத் மன்னர் ஷேக் சபா அல் அஹமத்திற்கு கடந்த ஜூலை மாதம் திடீரென உடல்நலம் பாதிப்பு ஏற்பட்டது.  இதையடுத்து குவைத்திலிருந்து மேல் சிகிச்சைக்காக அமெரிக்கா அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை  அளிக்கப்பட்டு வந்த நிலையில் கடந்த 29ம் தேதி சிகிச்சை பலனின்றி அவர் மரணம் அடைந்தார்.இந்நிலையில் மறைந்த குவைத் மன்னருக்கு தமிழக அரசு சார்பில் இன்று ஒரு நாள் துக்கம் அனுசரிக்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. இது குறித்து தமிழக அரசின் தலைமை செயலாளர் சண்முகம் அனைத்து துறை தலைவர்கள், மாவட்ட கலெக்டர்கள், டிஜிபி மற்றும் காவல் ஆணையர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில், அக்டோபர் 4ம் தேதி (இன்று) அரசு அலுவலகங்களில் தேசியக்கொடி அரைக் கம்பத்தில் பறக்க வேண்டும். அரசு சார்ந்த எந்த நிகழ்ச்சிகளும் நடத்தக்கூடாது என்று அதில் கூறப்பட்டுள்ளது.

Recommend For You

Post Top Ad