தகுதி தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் - சிறுபான்மையற்ற பள்ளி ஆசிரியர்கள் கோரிக்கை! - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Tuesday, September 1, 2020

தகுதி தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் - சிறுபான்மையற்ற பள்ளி ஆசிரியர்கள் கோரிக்கை!








தகுதித் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று அரசு உதவிபெறும் சிறுபான்மையற்ற பள்ளிகளில் பணிபுரியும் 1,700 ஆசிரியர்கள் முதல்வருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழகம் முழுவதும் உள்ள அரசு உதவிபெறும் சிறுபான்மையற்ற பள்ளிகளில் 1,700 ஆசிரியர்கள் 2010 - ம் ஆண்டு பணியில் சேர்ந்தனர். 


இந்நிலையில் , மத்திய அரசின் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் ஆசிரியர் தகுதித் தேர்வு ( டெட் ) 2010 - ம் ஆண்டு ஆக.23 - ம் தேதி கட்டாயமாக்கப்பட்டது. இதையடுத்து , தமிழகத்தில் ஆசிரியர் பணிக்குத் தகுதித் தேர்வில் வெற்றி பெறுவது அவசியம் என்று பள்ளிக் கல்வித்துறை 2012 நவம்பர் 16 - ம் தேதி சுற்றறிக்கை வெளியிட்டது. மேலும் , இத்தேர்வில் வெற்றி பெறாத ஆசிரியர்கள் , அரசு பணியில் தொடர வாய்ப்பில்லை என அறிவிக்கப்பட்டது.


இதை எதிர்த்து அரசு உதவி பெறும் சிறுபான்மைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து விலக்குப் பெற்றனர். ஆனால் , அரசு உதவி பெறும் சிறுபான்மையற்ற பள்ளிகளைச் சேர்ந்த 1,700 ஆசிரியர்களுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்படவில்லை. இது குறித்து தகுதித் தேர்வு நிபந்தனை ஆசிரியர்கள் கூட்டமைப்பினர் கூறியதாவது :




பள்ளிக் கல்வித்துறை 2012ல் அறிவிப்பு வெளியிடுவதற்கு முன்பே 2010 - ம் ஆண்டு பணியில் சேர்ந்துவிட்டோம். அரசு உதவி பெறும் சிறுபான்மைப் பள்ளி ஆசிரியர்களுக்குத் தகுதித் தேர்வில் இருந்து விலக்கு அளித்ததுபோல் , சிறுபான்மையற்ற பள்ளிகளில் கடந்த 10 ஆண்டுகளாகப் பணிபுரியும் எங்களுக்கும் விலக்கு அளிக்க முதல்வர் பழனிசாமி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Post Top Ad