2 ஷிப்டுகளில் நடத்த திட்டம் வகுப்புகளை நடத்த மத்திய அரசு திட்டம் - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Friday, August 7, 2020

2 ஷிப்டுகளில் நடத்த திட்டம் வகுப்புகளை நடத்த மத்திய அரசு திட்டம்

வகுப்புகளை 2 ஷிப்டுகளில் நடத்த திட்டம் - ஓவ்வொரு ஷிப்டிலும் 33 சதவீத ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் பணியில் இருக்க அறிவுறுத்தல்-மத்திய அரசு



செப்டம்பர் 1 முதல் படிப்படியாக பள்ளிகளை திறக்க அனுமதிக்க மத்திய அரசு ஆலோசனை மேற்கொண்டு வருகிறது.

புதுடெல்லி

கொரோனா வைரஸ் தொற்றுநோய் பாதிப்பை தொடர்ந்து  நாடுமுழுவதும் கடந்த  மார்ச் 23 முதல் பள்ளிகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன.

செப்டம்பர் 1 முதல் படிப்படியாக பள்ளிகளை திறக்க அனுமதிக்க மத்திய அரசு ஆலோசனை மேற்கொண்டு வருகிறது. மாநிலங்களில் உள்ள கொரோனா நிலவரத்தை கருத்தில் கொண்டு அந்தந்த மாநில அரசுகள் முடிவெடுக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளிகள் மற்றும் கல்வி நிறுவனங்களைத் திறப்பதற்காக மத்திய அரசு வெறுமனே பரந்த தரநிலை செயல்பாட்டு நடைமுறைகளை (எஸ்ஓபி) 




வெளியிடும், வகுப்பறையை எப்போது, எப்படி மறுதொடக்கம் செய்வது என்று முடிவெடுப்பதற்காக அந்தந்த மாநில அரசுகளுக்கு இறுதி முடிவு விடப்படும்.

செப்டம்பர் 1 ந்தேதி தொடங்கி நவம்பர் 14 ந்தேதி வரை படிப்படியாக பள்ளிகளை திறக்க அனுமதிக்க திட்டமிடப்பட்டுள்ளது. பள்ளிகள் திறப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் ஆகஸ்ட் இறுதியில் மத்திய அரசு வெளியிடும் என எதிர் பார்க்கப்படுகிறது.




வகுப்பறைகளின் சுத்திகரிப்புக்கு முக்கியத்துவம்  மிகப்பெரிய சிறப்பம்சமாக இருக்கும். பள்ளிகள் ஷிப்டுகளில் செயல்பட அறிவுறுத்தப்படும்காலை 8 




முதல் 11 மணி வரை மற்றும் 12 முதல் 3 மணி வரை வும் என் சுத்திகரிப்புக்கு ஒரு மணிநேரமும் ஒதுக்கப்படும்.

Post Top Ad