அரசுப்பள்ளி பழங்குடியின மாணவர்களின் D.Ted, TET பயிற்சி கட்டணம் அரசு ஏற்றல் - TET தேர்ச்சி பெற்றால் நேரடி அரசு ஆசிரியர் பணி - செயல்முறைகள் கடிதம் - Asiriyar.Net

Post Top Ad


Saturday, July 18, 2020

அரசுப்பள்ளி பழங்குடியின மாணவர்களின் D.Ted, TET பயிற்சி கட்டணம் அரசு ஏற்றல் - TET தேர்ச்சி பெற்றால் நேரடி அரசு ஆசிரியர் பணி - செயல்முறைகள் கடிதம்


பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களின் மாணவர்களின் D.Ted கட்டணம் TET பயிற்சி கட்டணம் ஆகியவை அரசு ஏற்றல் டெட் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு பழங்குடியினர் துறையில் கீழ் செயல்படும் பள்ளிகளில் நேரடி அரசு ஆசிரியர் பணி செயல்முறைகள் கடிதம்


பார்வை 1-ல் காணும் அரசாணையின்படி அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் கல்வி பயிலும் 100 பழங்குடியின மாணவ மாணவியர்கள் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு தேர்ச்சி பெற்றவுடன் அவர்களது விருப்பத்தின் அடிப்படையில் கல்வியியல் பட்டப் படிப்பில் சேர்ந்து தங்கள் பட்டப்படிப்பை முடித்தபின் தமிழ்நாடு அரசு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற தனியார் பயிற்சி நிலையங்களில் சேர்ந்து தகுதித்தேர்வில் வெற்றி பெறும் பழங்குடியின இடைநிலை ஆசிரியர்கள் தர வரிசை அடிப்படையில் இத் துறையின் கீழ் இயங்கும் அரசு பழங்குடியினர் உண்டி உறைவிட தொடக்கப் பள்ளிகளில் இடைநிலை ஆசிரியராக பணி நியமனம் செய்யப்படுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது2019 - 2020 இரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவ மாணவியர்களுக்கு தரப்பட்ட தொகுப்பு மதிப்பெண் பட்டியலின் அடிப்படையில் மேற்கண்ட திட்டத்தின் விபரங்கள் மாவட்டங்களில் உள்ள பழங்குடியினர் உண்டி உறைவிட மேல்நிலைப் பள்ளிகளில் பயின்ற பழங்குடியின மாணவர்களுக்கு தெரிவித்தல் மற்றும் பள்ளியின் விளம்பரப் பலகையில் அறிவிப்பு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன் மேலும் விருப்பம் உள்ள பழங்குடியின மாணவர்களிடம் இருந்து விருப்ப கடிதம் பெற்று இம்மாதம் 31.07.2020க்குள்  அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்


Recommend For You

Post Top Ad