மேலும் ஒரு தமிழக அமைச்சருக்கு கொரோனா தொற்று உறுதி - Asiriyar.Net

Post Top Ad


Wednesday, July 8, 2020

மேலும் ஒரு தமிழக அமைச்சருக்கு கொரோனா தொற்று உறுதி

மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதுதமிழக மதுவிலக்கு, மின்சாரம் மற்றும் ஆயத்தீர்வை அமைச்சர் தங்கமணிக்கு இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

அவருக்கு அறிகுறிகள் இல்லாமல் தொற்று ஏற்பட்டு உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அவருக்கு தொற்று உறுதியானதை தொடர்ந்து, இன்று மத்திய எரிசக்தி துறை அமைச்சர் உடனான ஆலோசனை கூட்டத்தில் அவர் பங்கேற்கவில்லை.

தமிழகத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள் 8 பேர் மற்றும் 1 அமைச்சர் சேர்த்து மொத்தம் 9 பேருக்கு இதுவரை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், மேலும் ஒரு அமைச்சருக்கும் தொற்று உறுதியாகியுள்ளது.

Recommend For You

Post Top Ad