ரியாலிட்டி தொழில்நுட்பத்தில் பாடம் நடத்தும் ஆசிரியை - Asiriyar.Net

Post Top Ad


Tuesday, July 14, 2020

ரியாலிட்டி தொழில்நுட்பத்தில் பாடம் நடத்தும் ஆசிரியை


கேரளாவில் ஒரு பள்ளியில் ஆகுமென்ட் ரியாலிட்டி தொழில்நுட்பம் கொண்டு பாடம் நடத்தப்படுகிறது. இது வைரலாகியுள்ளது.கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்துவரும் நிலையில் மாணவர்கள் பள்ளிக்குச் செல்ல இயலாமல் வீட்டிலிருந்தே தங்கள் லேப்டாப்புகளில் ஆன்லைனில் வகுப்புகள் பயின்று வருகின்றனர்.

ஆனால் வகுப்பறைக்குச் சென்று பயில்வதுபோல ஆன்லைன் கிளாஸ்களில் பாடத்தை கற்பிக்க முடியவில்லை என ஆசிரியர்கள் பலர் கூறுகின்றனர்.

இந்நிலையில் ஷ்யாம் வெங்கலூர் என்கிற சமூக அறிவியல் ஆசிரியை கேரளாவின் ஏஇஎம் பள்ளியில் மாணவர்களுக்கு ஆகுமென்ட் ரியாலிட்டி தொழில்நுட்பம் மூலம் பாடம் நடத்துகிறார். இதனால் இவர் நடத்தும் ஆன்லைன் வகுப்புகள் மாணவர்களுக்கு போரடிக்காமல் மிகவும் சுவாரஸ்யமாக செல்கிறது என மாணவர்களின் பெற்றோர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.


இவர் நடத்தும் வகுப்புகளில் பூமிப்பந்து பற்றி பாடம் நடத்தினால் பூமியை மூன்று பரிணாமத்தில் திரையில் தோன்றுகிறது. யானையைப் பற்றி பாடம் நடத்தினால் திடீரென திரையில் பெரிய சைஸ் யானையை தோன்றுகிறது. இவ்வாறாக பாடத்தை ஆகுமென்ட் ரியாலிட்டி தொழில்நுட்பம் மூலம் மிகவும் சுவாரசியமாக நடத்துகிறார்.

இவரது இந்த முயற்சிக்கு பலர் வரவேற்பு தெரிவித்துள்ளனர். பள்ளி நிர்வாகம் இதற்கு முழு ஆதரவு அளிக்கிறது. இது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

Recommend For You

Post Top Ad