தனியார் பள்ளிகள் கட்டண நிர்ணயம் குறித்து இயக்குனர் செயல்முறைகள் - Asiriyar.Net

Post Top Ad


Saturday, July 18, 2020

தனியார் பள்ளிகள் கட்டண நிர்ணயம் குறித்து இயக்குனர் செயல்முறைகள்


Fee Determination committee - Submission of proposal to committee through online - instruction Reg

தனியார் பள்ளிகள் கட்டண நிர்ணயக் குழு தனி அலுவலரின் கடிதத்தின் வாயிலாக அனைத்து அங்கீகரிக்கப்பட்ட தனியார் பள்ளிகளின் நிர்வாகிகளுக்கு ( சி.பி.எஸ்.இ மற்றும் ஐ.சி.எஸ்.இ பள்ளிகள் தவிர்த்து ) 2019-20ம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட செலவீனங்களின் அடிப்படையில் 2020-2021 , 2021-2022 மற்றும் 2022-2023 நிதி ஆண்டுகளுக்கான கல்வி கட்டணத்திற்கான உரிய கருத்துருவினை 20.07.2020 முதல் 25.09.2020 க்குள் கீழ்காணும் கட்டண நிர்ணயக் குழுவின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்திட உரிய அறிவுரைகளை வழங்குமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் .


 எனவே , இதன் முக்கியத்துவத்தினை கருத்தில் கொண்டு கட்டண நிர்ணயக் குழுவால் கோரப்பட்ட விவரத்தினை காலதாமதமின்றி இணையதளத்தில் பதிவேற்றம் செய்திடவும் மேலும் 25.09.2020 க்கு மேல் எக்காரணத்தைக் கொண்டும் காலக்கெடுவினை நீட்டிக்க இயலாது என சார்ந்த பள்ளிகளின் நிர்வாகிகளுக்கு அறிவுறுத்துமாறு முதன்மைக் கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.


Recommend For You

Post Top Ad