2, 3, 4, 5, 7 மற்றும் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு விலையில்லா பெருள்களை 03.08.2020 முதல் வழங்க உத்தரவு - Director Proceedings - Asiriyar.Net

Post Top Ad


Thursday, July 30, 2020

2, 3, 4, 5, 7 மற்றும் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு விலையில்லா பெருள்களை 03.08.2020 முதல் வழங்க உத்தரவு - Director Proceedingsஅரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் 2, 3, 4, 5, 7 மற்றும் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு விலையில்லா பாடநூல்கள், புத்தகப்பை போன்ற கல்வி சார்ந்த பெருள்களை  ஆகஸ்ட் 3ஆம் தேதி முதல் வழங்க பள்ளி உத்தரவு.
அனைத்து பள்ளிகளிலும் பயிலும் மாணவர்களுக்கு பாடநூல்கள் மற்றும் கல்வி சார்ந்த பொருட்களை உரிய வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி வழங்க அரசால் உத்தரவிடப்பட்டுள்ளது. அரசாணையில் தெரிவிக்கப்பட்ட நிலையான செயல்பாட்டு வழிமுறைகளை ( SOP ) பின்பற்றி 10 ஆம் மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு விலையில்லா பாடநூல்கள் வழங்கப்பட்டது.

 பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகளின் படி 1 முதல் 9 ஆம் வகுப்பு வரை பயிலும் அனைத்து மாணவர்களும் 2019-20 கல்வியாண்டில் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அம்மாணவர்கள் அடுத்த வகுப்பிற்கு செல்ல தகுதியுடையவர்களாகின்றனர். இம்மாணவர்களில் 2,3,4,5,7 மற்றும் 8 ஆம் வகுப்பு மாணவர்கள் அதே பள்ளியில் கல்வி தொடர வாய்ப்புள்ளதால் அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் 2,3,4,5,7 மற்றும் 8 ஆகிய வகுப்பு மாணவர்களுக்கு பார்வையில் காணும் அரசாணையில் தெரிவித்துள்ள நிலையான செயல்பாட்டு வழிமுறைகளை ( SOP ) பின்பற்றி 3.08.2020 அன்று முதல் விலையில்லா பாடநூல்கள் மற்றும் புத்தகப்பை வழங்குமாறு அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் உயர்நிலை / மேல்நிலை பள்ளிகளில் உள்ள 7 மற்றும் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு விலையில்லா பாடநூல்கள் மற்றும் புத்தகப்பை வழங்கப்பட வேண்டும். இது போன்றே அரசு மற்றும் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளிகளில் 7 மற்றும் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு முதலிலும் அதனை தொடர்ந்து 2,3,4,5 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு விலையில்லா பாடநூல்கள் மற்றும் புத்தகப்பை வழங்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

 அதுபோலவே அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளிகளில் 2,3,4,5 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு விலையில்லா பாடநூல்கள் மற்றும் புத்தகப்பை வழங்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். விலையில்லா பாடநூல்கள் மற்றும் புத்தகப்பை பெறுவதற்காக வரும் மாணவர்கள் / பெற்றோர்கள் முககவசம் அணிந்து வருமாறு தெரிவிக்க வேண்டும் . விலையில்லா பாடநூல்கள் மற்றும் புத்தகப்பை வழங்கும்போது சமூக இடைவெளியை கடைபிடிக்க அறிவுறுத்தப்பட வேண்டும். 

பள்ளியின் நுழைவாயிலில் கூட்டம் சேராமல் பார்த்துக் கொள்ள வேண்டும் . ஒரு மணி நேரதிற்கு 20 மாணவர்கள் அட்டவணை பின்பற்றி மாணவர்களுக்கு விலையில்லா பாடநூல்கள் மற்றும் புத்தகப்பை வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. மாணவர்கள் அதிகமாக உள்ள பள்ளிகளில் இரண்டு அல்லது மூன்று கவுண்டர்களில் விநியோகிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறது . 

கோவிட் 19 கட்டுப்படுத்தப்பட்ட பகுதியில் ( Containment Zone ) மாணவர் எவரேனும் இருப்பின் அவர்களுடைய தனிமைபடுத்தப்பட்ட கால அளவு ( Quarantine Period ) முடிந்த பிறகு பள்ளிக்கு வரவழைத்து விலையில்லா பாடநூல்கள் மற்றும் புத்தகப்பை வழங்க வேண்டும். மேற்கண்ட அறிவுரைகளை சம்பந்தப்பட்ட அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளித் தலைமையாசிரியர்களுக்குத் தெரிவித்து உரிய நடவடிக்கையினை மேற்கொள்ளுமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
Recommend For You

Post Top Ad