தமிழகத்தில் (03.07.2020) இன்று 4329 பேருக்கு கொரோனா - உயிரிழப்பு 64 - மாவட்ட வாரியான விவரம் - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Friday, July 3, 2020

தமிழகத்தில் (03.07.2020) இன்று 4329 பேருக்கு கொரோனா - உயிரிழப்பு 64 - மாவட்ட வாரியான விவரம்

தமிழகத்தில் ( 03.07.2020 ) இன்று 4,329 பேருக்கு கொரோனா பாதிப்பு.

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர்களின் எண்ணிக்கை  1,02,721 ஆக அதிகரிப்பு.

சென்னையில் இன்று ஒரே நாளில் 2,082   பேருக்கு கொரோனா தொற்று.

மேலும் அதிகமாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள மாவட்டங்கள்:

மதுரை - 287

வேலூர் - 145

செங்கல்பட்டு - 330

திருவள்ளூர் - 172

மாவட்ட வாரியாக இன்று குணமடைந்தவர்கள் : 1,385

இன்றைய உயிரிழப்பு : 64 ( 1,385 )

மாவட்ட வாரியான பாதிப்பு.( 03.07.2020 )





தமிழகத்தில் இன்று (ஜூலை 03) புதிதாக 4,329 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது, 64 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,02,721 ஆகவும், பலி எண்ணிக்கை 1,385 ஆகவும் அதிகரித்துள்ளது.


தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் இன்று 4,329 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. அதில், 4,264 பேர் தமிழகத்தை சேர்ந்தவர். வெளிமாநிலம், வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் 65 பேர். இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,02,721 ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் 35,028 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இதனுடன் சேர்த்து, இதுவரை 12 லட்சத்து 70 ஆயிரத்து 720 மாதிரிகள் சோதனையிடப்பட்டன. இன்று கொரோனா உறுதியானவர்களில், 2,621 பேர் ஆண்கள், 1,708 பேர் பெண்கள். கொரோனா பாதித்த, ஆண்களின் மொத்த எண்ணிக்கை 63,016 ஆகவும், பெண்களின் எண்ணிக்கை 39,683 ஆகவும், மூன்றாம் பாலினத்தவர்களின் எண்ணிக்கை 22 ஆகவும் உள்ளது.

தமிழகத்தில் 91 ஆய்வகங்கள் (அரசு-48 மற்றும் தனியார் 43) உள்ளன. இன்று மட்டும் 2,357 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால், வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 58 ஆயிரத்து 378 ஆக உள்ளது.

வயது வாரியாக பாதிப்பு

12 வயது வரை உள்ள சிறுவர், சிறுமிகள் என 5,053 பேர், 13 முதல் 60 வரை உள்ளவர்கள் 85 ஆயிரத்து 305 பேரும், 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் 12 ஆயிரத்து 363 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.


உயிரிழப்பு

இன்று மட்டும் கொரோனா பாதித்த 64 பேர் உயிரிழந்தனர். அதில், 22 பேர் தனியார் மருத்துவமனையிலும், 42 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்தனர். இதனால், தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு 1,385 ஆக அதிகரித்துள்ளது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Post Top Ad