Flash News : அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் 10% இட ஒதுக்கீடு - தமிழக அரசு ஒப்புதல். - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Monday, June 15, 2020

Flash News : அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் 10% இட ஒதுக்கீடு - தமிழக அரசு ஒப்புதல்.




நீட் தேர்வில் தேர்ச்சி பெறும் அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 10% உள்ஒதுக்கீடு வழங்கும் அவசர சட்டத்துக்கு தமிழக அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

முன்னதாக தலைமை செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10வது மாடியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் இன்று நடந்தது.

இந்த அமைச்சரவை கூட்டத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் உள்பட அனைத்து அமைச்சர்களும் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் கொரோனா பரவலை தடுப்பதற்காக அரசு எடுக்க வேண்டிய கூடுதல் நடவடிக்கைகள், கள  நிலவரம் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

மேலும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் நீட் தேர்வு அடிப்படையிலான மருத்துவ மாணவர் சேர்க்கையில் அரசுப்பள்ளி மாணவர்கள் அதிகளவில் சேரவில்லை என்பதால் ஓய்வுபெற்ற நீதியரசர் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவின் பரிந்துரைகளை அடிப்படையாகக் கொண்டு அவசர சட்டம் கொண்டுவர முடிவு செய்யப்பட்டுள்ளது.

சட்டம் இயற்றப்படும் பட்சத்தில் சட்டத்தை நிறைவேற்றி கவர்னரின் ஒப்புதலுக்கு உடனடியாக அனுப்பி வைக்கப்படும்.

நீதிபதி கலையரசன் தலைமையிலான குழு

மருத்துவ படிப்பில் சேருவதற்காக நடத்தப்படும், 'நீட்' தேர்வில் இருந்து, தமிழகத்திற்கு விலக்கு அளிக்கக் கோரி, தமிழக அரசு சார்பில், சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டது;

மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.அதைத் தொடர்ந்து, நீட் தேர்வில், தேர்ச்சி பெறும் அரசு பள்ளி மாணவர்களுக்கு, மருத்துவ மாணவர் சேர்க்கையில், உள் இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக ஆலோசித்து, அரசுக்கு அறிக்கை அளிப்பதற்காக, ஓய்வுபெற்ற நீதிபதி கலையரசன் தலைமையில், குழு கடந்த மார்ச் 21ம் தேதி அமைக்கப்பட்டது.

இக்குழு, கல்வியாளர்களுடன் ஆலோசனை நடத்தியது.அவர்கள் கூறிய கருத்துக்கள் அடிப்படையில், அறிக்கை தயார் செய்யப்பட்டது. நீதிபதி கலையரசன் தலைமையிலான குழு மருத்துவ படிப்பில் சேர, அரசு பள்ளி மாணவர்களுக்கு, உள் இடஒதுக்கீடு அளிப்பது தொடர்பான அறிக்கையை முதல்வரிடம் சமர்பித்தது.

இந்த அறிக்கையின் பரிந்துரைகள் அடிப்படையில் அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 10% உள்ஒதுக்கீடு வழங்கும் அவசர சட்டத்துக்கு தமிழக அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

Post Top Ad