பள்ளிகளை திறப்பதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை - அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு. - Asiriyar.Net

Post Top Ad


Saturday, June 27, 2020

பள்ளிகளை திறப்பதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை - அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு.


பள்ளிகள் திறப்பு மற்றும் ஆன்லைன் வகுப்புகள் குறித்த மாணவர்கள், பெற்றோர்களின் கேள்விகளுக்கு அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம் அளித்துள்ளார்.

ஒவ்வோர் ஆண்டும் புதிய கல்வி ஆண்டான ஜூன் மாதத்தில் பள்ளிகள் திறக்கப்படுவது வழக்கம். கரோனா பரவல் காரணமாக மார்ச் 16-ம் தேதி மூடப்பட்ட பள்ளி, கல்லூரி உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் இப்போதுவரை திறக்கப்படவில்லை. மாற்று ஏற்பாடாக பெரும்பாலான அனைத்துத் தனியார் பள்ளிகளும் தங்களின் மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகளை நடத்தி வருகின்றன.இதற்கிடையே பள்ளிகளை விரைவாகத் திறக்க வேண்டும் என்று தனியார் பள்ளிகள் அரசிடம் கோரிக்கை விடுத்திருந்தன. ஜூலை மாதத்தில் தேர்வு முடிவுகள் வெளியாகலாம் என்பதால் ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதத்தில் பள்ளிகள் திறக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. தமிழகத்தில் நாளுக்கு நாள் கரோனா தொற்று அதிகரித்து வரும் சூழலில், பள்ளிகள் திறக்கப்படுவது குறித்துப் பெற்றோர்கள் கவலை எழுப்பினர்.இந்நிலையில் இது தொடர்பாக இன்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், ''தற்போதைய நிலையில் பள்ளிகள் திறக்கப்படுவதற்கான சாத்தியம் இல்லை. ஆன்லைன் வகுப்புகள் குறித்து முதல்வருடன் கலந்து பேசி இரண்டு நாட்களில் அறிவிப்பு வெளியிடப்படும்'' என்று தெரிவித்துள்ளார்.

Recommend For You

Post Top Ad