"கொரோனா தொற்று" அறிகுறிகள் - ஆய்வில் புதிய தகவல்கள் - உங்களுக்கு இந்த அறிகுறிகள் இருக்கிறதா? - Asiriyar.Net

Post Top Ad


Saturday, June 13, 2020

"கொரோனா தொற்று" அறிகுறிகள் - ஆய்வில் புதிய தகவல்கள் - உங்களுக்கு இந்த அறிகுறிகள் இருக்கிறதா?
கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் காய்ச்சல் அல்லது இருமலுக்கு முன் நரம்பியல் அறிகுறிகள் தோன்றக்கூடும் என ஆய்வில் தெரியவந்து உள்ளது.

இந்நோய் தாக்கத்தின் அறிகுறிகளாக தொண்டை புண், சளி, இருமல், அதிகப்படியான உடல் வெப்பநிலை கொண்டிருக்கும் காய்ச்சல் போன்றவை  அறிகுறிகளாக எச்சரிக்கப்பட்டது. 


ஆனால் காய்ச்சல், இருமல் அல்லது சுவாச பிரச்சினைகள் ஏற்படுவதற்கு முன்பு, கொரோனா நோய்த்தொற்றுக்கு ஆரம்பத்தில் நரம்பியல் அறிகுறிகள் இருக்கலாம் என்று தற்போதை ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பான கட்டுரை அன்னல்ஸ் ஆஃப் நியூரோலஜி இதழில் வெளியிடப்பட்டுள்ளது. அதில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கொரோனா நோயாளிகளில் கிட்டத்தட்ட பாதி பேர் தலைவலி, தலைச்சுற்றல், விழிப்புணர்வு குறைதல், கவனம் செலுத்துவதில் சிரமம், வாசனை மற்றும் சுவையின் கோளாறுகள், வலிப்பு தாக்கங்கள், பக்கவாதம், பலவீனம் மற்றும் தசை வலி போன்ற நரம்பியல் பிரச்சினை வெளிப்பாடுகளைக் ஆரம்பத்தில் கொண்டுள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். 


ஆய்வின்படி, இந்த நோய் மூளை, முதுகெலும்பு, நரம்புகள் மற்றும் தசைகள் உட்பட முழு நரம்பு மண்டலத்தையும் பாதிக்கலாம்.

மூளை, ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் பாதிக்கப்படலாம் அல்லது பக்கவாதம் ஏற்படக்கூடிய உறைதல் கோளாறுகளால் பாதிக்கப்படலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.


மேலும் இந்த கொரோனா வைரஸ் மூளை, மெனிங்கேஸ் - நரம்பு மண்டலத்தின் பல பகுதிகளை இணைக்கும் ஒரு திசு - மற்றும் மண்டைக்கு அதிர்ச்சி உறிஞ்சியாக செயல்படும் செரிப்ரோஸ்பைனல் திரவம் (CSF) ஆகியவற்றில் நேரடி தொற்றுநோயை ஏற்படுத்தக்கூடும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் கூறினர். 

நோய்த்தொற்றுக்கான நோயெதிர்ப்பு மண்டலத்தின் எதிர்விளைவு மூளை மற்றும் நரம்புகளை சேதப்படுத்தும் அழற்சியையும் ஏற்படுத்தக்கூடும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்து உள்ளனர்.

Recommend For You

Post Top Ad