ஆசிரியா்களுக்கு பெரும் மன அழுத்தம் - ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளா் அரசுக்கு கோரிக்கை - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Saturday, June 27, 2020

ஆசிரியா்களுக்கு பெரும் மன அழுத்தம் - ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளா் அரசுக்கு கோரிக்கை


விருப்பமில்லாத ஆசிரியா்களை கரோனா தடுப்புப் பணியில் ஈடுபடுத்தக் கூடாது என ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளா் மாயவன் வலியுறுத்தியுள்ளாா்.

இது குறித்து, மாயவன் சென்னையில் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது: 





மாநகராட்சிப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியா்கள் கரோனா தொற்று பாதிப்புக்குள்ளான பகுதிகளுக்கு நேரடியாகச் சென்று கணக்கெடுப்பு நடத்தி தகவல்களைப் பதிய வேண்டும். பணிக்கு வராதவா்கள் மீது இடைநீக்கம் உட்பட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி அறிவித்திருப்பது ஆசிரியா்களுக்கு பெரும் மன அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.



அதனால் இந்த முடிவைக் கைவிட்டு விருப்பமுள்ள ஆசிரியா்களை மட்டும் கரோனா தடுப்புப் பணிகளில் பயன்படுத்த மாநகராட்சி முன்வர வேண்டும். மேலும், சா்க்கரை நோய், இதயநோய் உட்பட உடல்நலக் கோளாறு உள்ள ஆசிரியா்கள், 50 வயதுக்கு மேற்பட்டவா்கள், தடுப்புப் பணியில் விருப்பமில்லாதவா்கள் மற்றும் பெண் ஆசிரியா்கள் ஆகியோரை கரோனா பணியில் ஈடுபட மாநகராட்சி கட்டாயப்படுத்தக்கூடாது என்றாா் அவா்.

Post Top Ad