சத்துணவு ஊழியர்களுக்கு 'அம்மா' இருசக்கர வாகன மானியம் - Asiriyar.Net

Post Top Ad


Friday, June 5, 2020

சத்துணவு ஊழியர்களுக்கு 'அம்மா' இருசக்கர வாகன மானியம்இருசக்கர வாகன மானிய திட்டத்தில், சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்கள் பயன்பெற முடியும்.உழைக்கும் பெண்களின் வாழ்வாதார மேம்பாட்டுக்காக, 50 சதவீத மானிய விலையில், 'அம்மா' இருசக்கர வாகனம் வழங்கும் திட்டம், தமிழக அரசால் செயல்படுத்தப்படுகிறது.


இத்திட்டத்தில், ஊரகம், பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிகளில் வசிக்கும் உழைக்கும் பெண்களுக்கு, இருசக்கர வாகனம் வழங்க மானிய தொகையாக, 25 ஆயிரம் ரூபாய் அல்லது வாகனத்தின் விலையில், 50 சதவீதம் வழங்கப்படுகிறது.அதிகாரிகள் கூறியதாவது:


சிறப்பு காலமுறை ஊதியம் பெறும், அங்கன்வாடி, சத்துணவு பணியாளர்கள், சமையலர்கள், உதவியாளர்கள், கூட்டுறவு சங்கங்களில் பணிபுரியும் மகளிர், சிறப்பு காலமுறை ஊதியம் பெறும் அரசு மற்றும் அரசு சார் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர், 18 முதல், 45 வயதுக்கு உட்பட்டவராகவும், ஆண்டு வருவாய், 2.5 லட்சம் ரூபாய்க்குள்ளும் இருக்க வேண்டும். இவ்வாறு, அவர்கள் கூறினர் - நமது நிருபர் -

Recommend For You

Post Top Ad