"பள்ளிகள் திறப்பு".. முதல்வர் தலைமையில் 16 பேர் கொண்ட குழு அமைப்பு: அமைச்சர் செங்கோட்டையன்!! - Asiriyar.Net

Post Top Ad


Sunday, June 7, 2020

"பள்ளிகள் திறப்பு".. முதல்வர் தலைமையில் 16 பேர் கொண்ட குழு அமைப்பு: அமைச்சர் செங்கோட்டையன்!!
பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்பதை பொறுத்தவரை, முதல்வர் தலைமையில் 16 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

ஈரோட்டில் மாவட்டம் சத்தியமங்கலத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது, பெற்றோர்கள் மற்றும் கல்வியாளர்களின் கருத்து கேட்டபின் பள்ளிகள் திறப்பது குறித்து முதலமைச்சர் அறிவிப்பார் என தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் பரவல் காரணமாக தமிழகம் முழுவதும் கடத்த மார்ச் மாதம் 25ம் தேதி முதல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது.

இதன் காரணமாக அனைத்து பள்ளிகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. மேலும் 5ம் கட்டமாக ஜூன் 30ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் வழங்கப்பட்டிருந்தாலும் இதுவரை பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்க அனுமதி வழங்கப்படவில்லை. இந்த நிலையில், ஜூன் 1ம் தேதி முதல் 10ம் தேதி வரை பொதுத்தேர்வு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், மீண்டும் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டன.

அதனை தொடர்ந்து ஜூன் 15ம் தேதி முதல் ஜூன் 25ம் தேதி வரை 10ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு நடைபெறும் என அரசு அறிவித்திருந்தது. அதற்கான ஆயத்த பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இந்த நிலையில், பள்ளிகள் திறப்பது குறித்து முதல்வர் தலைமையில் 16 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

Recommend For You

Post Top Ad