தமிழகத்தில் (15.06.2020) இன்று கொரோனா மற்றும் உயிரிழப்பு நிலவரம் மாவட்ட வாரியான விவரம் - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Monday, June 15, 2020

தமிழகத்தில் (15.06.2020) இன்று கொரோனா மற்றும் உயிரிழப்பு நிலவரம் மாவட்ட வாரியான விவரம்





 தமிழகத்தில் மேலும் 1,843 பேருக்கு கொரோனா தொற்று

* தமிழகத்தில் கொரோனாவில் இருந்து இதுவரை 25,344 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பியுள்ளனர். தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்த 797 பேர் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

* தமிழகத்தில் கொரோனாவால் இன்று மேலும் 44 பேர் உயிரிழந்துள்ளனர். பலி எண்ணிக்கை 479-ஆக உயர்ந்துள்ளது.

*  சென்னையில் இன்று ஒரே நாளில் 1257 பேர் கொரோனானால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மொத்தம் 33,244 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

* இந்தியாவிலேயே அதிகபட்சமாக தமிழகத்தில் மொத்தம் 79 மையங்களில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தற்போது 20,678 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

* தமிழகத்தில் இதுவரை 7,29,002 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

* மகாராஷ்டிராவில் இருந்து திரும்புவோருக்கு சோதனை சாவடிகளிலேயே கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது.

* அனைத்து மாவட்டங்களிலும் பரிசோதனை அதிகமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதிக பரிசோதனைகள் மேற்கொள்வது நல்லது என மருத்துவக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

* தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு குணமடைந்து வருபவர்களின் விகிதம் 54.49% ஆக உள்ளது.

* தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 18,403 பேரின் சளி மாதிரிகள் பரிசோதித்ததில் 1438 பேருக்கு தொற்று உறுதியானது.

* கொரோனாவுக்கு எதிராக மக்கள் இயக்கமாக நாம் மாற வேண்டும்.

* தடுப்பூசிகள், மருந்துகள் இல்லமால் சிகிச்சை அளிக்கும் முறையை அரசு பின்பற்றுகிறது.

* தமிழகத்தில் அதிக பரிசோதனைகள் நடத்தப்படுவதால், விரைவில் குணப்படுத்தப்படுகிறது.

* மின்னல் வேகத்தில் பரவும் கொரோனா வைரசை அரசு கட்டுப்படுத்தி வருகிறது.

* மாநகராட்சி ஊழியர்கள் வீடு வீடாக சென்று பரிசோதனை செய்து வருகின்றனர். ஒவ்வொரு உயிரும் அரசுக்கு முக்கியம்.

* வல்லரசு நாடுகள் விழி பிதுங்கி நிற்கின்றன தமிழக அரசு களத்தில் நின்று போராடி வருகிறது.

* கொரோனா தொடர்பான எந்த தகவலையும் அரசு மறைக்கவில்லை,மறுக்கவும் இல்லை.


* வெளிமாநிலங்களில் அல்லது வெளிநாடுகளில் இருந்து வந்து கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்கள்;

     ^ மகாராஷ்டிரா - 18
   
     ^ டெல்லி - 11

     ^ கேரளா - 3

     ^ ராஜஸ்தான் - 2

     ^ கர்நாடகா - 4

     ^ ஆந்திரப்பிரதேசம் - 1

     ^ உதிர்ப்பிரேதேசம் - 1

     ^ ஒடிஷா - 1


* வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள்

     ^ துபாய் - 1

     ^ அரபு எமிரேட்ஸ் - 1

     ^ கத்தார் - 4

     ^ மலேசியா - 2

    ^ தோஹா - 1

    ^ மஸ்கட் - 4










Post Top Ad