10ம் வகுப்பு பொது தேர்வு வழக்கு ஜூன் 11ம் தேதி ஒத்திவைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு - Asiriyar.Net

Post Top Ad


Monday, June 8, 2020

10ம் வகுப்பு பொது தேர்வு வழக்கு ஜூன் 11ம் தேதி ஒத்திவைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
10ம் வகுப்பு பொது தேர்வு வழக்கு ஜூன் 11ம் தேதி ஒத்திவைத்து சென்னை உயர்நீதிமன்றம்  உத்தரவு

10ம் வகுப்பு பொது தேர்வு வழக்கில் அரசு விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு..!

எல்லா ஏற்பாடுகளையும் செய்துவிட்டோம் என்று அரசு தரப்பில் வாதிட்டது என மனுதாரர் மாயவன் தெரிவித்துள்ளார். அரசு தரப்பு வாதத்தை ஏற்க முடியாது என்று ஐகோர்ட் கூறியது. 10 லட்சம் மாணவர்களின் உயிர் சம்மந்தப்பட்டது என்றும் நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர். எனவே பொதுத்தேர்வை தமிழக அரசு தள்ளிவைக்க வேண்டும் என மாயவன் வலியுறுத்தியுள்ளார்.


10-ம் வகுப்பு தேர்வு வழக்கில் தமிழக அரசு விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வை தள்ளிவைக்க முடியுமா என அரசு பரிசீலிக்க வேண்டும். ஏற்கனவே பல வழக்குகள் நிலுவையில் உள்ளதால் அதனுடன் இதையும் விசாரிக்க முடிவு. மேலும் இது தொடர்பான வழக்கு விசாரணையை ஜூன் 11-ம் தேதிக்கு ஒத்திவைத்தது.
Recommend For You

Post Top Ad