இன்று (08.06.2020) ஆசிரியர்கள் செல்ல வேண்டுமா? தொடக்க/ நடுநிலைப் பள்ளி ஆசிரியர்கள் கவனத்திற்கு - Asiriyar.Net

Post Top Ad


Monday, June 8, 2020

இன்று (08.06.2020) ஆசிரியர்கள் செல்ல வேண்டுமா? தொடக்க/ நடுநிலைப் பள்ளி ஆசிரியர்கள் கவனத்திற்கு
அன்புள்ளம் கொண்ட ஆசிரிய பெருமக்களுக்கு வணக்கம். நாளை ஊராட்சி ஒன்றிய தொடக்க/ நடுநிலைப் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்கள் பள்ளிக்கு செல்ல வேண்டியதில்லை.


குறிப்பாக நடுநிலைப் பள்ளிகளில் தேர்வு மையம் ஏற்படுத்தி இருந்தால் அப்பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்கள் மட்டுமே பள்ளிக்கு செல்லவேண்டும் என தொடக்கக் கல்வி இயக்குநர் அவர்களை தொலைபேசியில் கேட்டு அறிந்துள்ளேன் 


ஆகவே ஆசிரியர்கள் அச்சப்பட வேண்டிய அவசியமில்லை. ஒருசில முதன்மைக் கல்வி அலுவலர்கள் அனைத்து நிலை ஆசிரியர்களும் பள்ளிக்கு சென்று ஆசிரியர் வருகை பதிவேட்டில் கையொப்பம் இட்டு வாட்ஸ் அப்பில் பதிவு செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளனர் இது முற்றிலும் தவறான செய்தியாகும் தேர்வு மையம் உள்ள பள்ளி மட்டும் ஒத்துழைப்பு அளிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்


ந.ரெங்கராஜன்
பொது செயலாளர்
தமிழ்நாடு. தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி .

Recommend For You

Post Top Ad