தொடக்கக் கல்வித்துறை ஆசிரியர்கள் பணிக்கு வர வேண்டும், தவறும்பட்சத்தில் துறைரீதியான நடவடிக்கை - CEO உத்தரவு. - Asiriyar.Net

Post Top Ad


Tuesday, May 19, 2020

தொடக்கக் கல்வித்துறை ஆசிரியர்கள் பணிக்கு வர வேண்டும், தவறும்பட்சத்தில் துறைரீதியான நடவடிக்கை - CEO உத்தரவு.கொரானோ வைரஸ் நோய்த்தொற்று பரவலை தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காக மார்ச் / ஏப்ரல் 2020 - இடைநிலை பொதுத்தேர்வினை ஒரு அறைக்கு 10 நபர்கள் என்ற வீதத்தில் தேர்வு எழுதுவதற்கு கூடுதலாக அறை கண்காணிப்பாளர்கள் தேவைப்படுவதால் , வட்டாரக்கல்வி அலுவலர்கள் தங்கள் ஆளுகைக்குட்பட்ட அனைத்து அரசு / ஊராட்சி ஒன்றிய / நிதியுதவி தொடக்க / நடுநிலை பள்ளிகளில் பணிபுரியும் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களுக்கு தகவல் தெரிவித்து , வருகின்ற 30.05.2020 முதல் 12.06.2020 வரை தவறாமல் வருகைதர வேண்டுமெனவும் ,


தனியாக வருகைப் பதிவேட்டினை மேற்கொண்டு அனைத்து ஆசிரியர்களின் வருகையை பதிவுசெய்து உடனுக்குடன் பெற்று இவ்வலுவலகம் அனுப்பி வைக்குமாறும் அனைத்து வட்டாரக்கல்வி அலுவலர்களுக்கும் தெரிவிக்கப்படுகிறது. மேலும் அனைத்து ஆசிரியர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டதற்கான ஒப்புதல் கடிதத்தினை அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது .


குறிப்பு- இது தேர்வுகள் அவசரம் என்பதால் ஆசிரியர்கள் எவ்வித சுணக்கமும் இன்றி செயல்பட வேண்டுமெனவும் அனைத்து ஆசிரியர்களும் பணிக்கு திரும்புமாறும் தெரிவிக்கப்படுகிறது. தவறும்பட்சத்தில் எவ்வித விளக்கம் கோரப்படாமல் தங்கள் மீது துறைரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்பதை திட்டவட்டமாக தெரிவிக்கப்படுகிறது .Recommend For You

Post Top Ad