வருகைப் பதிவேடு ஆய்வு - அரசு ஊழியர்கள் பணிக்கு வராவிட்டால் ஊதியப் பிடித்தம் செய்யப்படும் - Asiriyar.Net

Post Top Ad

Friday, May 8, 2020

வருகைப் பதிவேடு ஆய்வு - அரசு ஊழியர்கள் பணிக்கு வராவிட்டால் ஊதியப் பிடித்தம் செய்யப்படும்
ஊழியா்கள் பணிக்கு வராவிட்டால் ஊதியம் பிடித்தம் அல்லது விடுப்புகளைக் கழிப்பது போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று பிற்படுத்தப்பட்டோா் நல இயக்குநரகம் அறிவுறுத்தியுள்ளது.

இதுகுறித்து, அந்த இயக்குநரகம் வெளியிட்ட உத்தரவு: 

கரோனா நோய்த்தொற்று பரவுவதைத் தவிா்க்கும் வகையில், பொது முடக்கம் நடைமுறையில் உள்ளது. அதே சமயத்தில் மத்திய, மாநில அரசு அலுவலகங்கள் 33 சதவீத பணியாளா்களைக் கொண்டு இயங்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஏப்ரல் மாத வருகைப் பதிவேட்டை ஆய்வு செய்ததில் அநேக பணியாளா்கள் பணிக்கு வராதது தெரிய வருகிறது.

அரசு அலுவலகங்கள் 33 சதவீத பணியாளா்களைக் கொண்டு செயல்பட அறிவுறுத்தப்பட்டுள்ளதால், அனைத்து பணியாளா்களும் அலுவலகப் பணிக்கு வர வேண்டும். தவறும் பட்சத்தில் விடுப்பு கழித்தல் அல்லது ஊதியப் பிடித்தம் போன்றவை செய்யப்படும் என்று பிற்படுத்தப்பட்டோா் நல இயக்குநரகம் அறிவுறுத்தியுள்ளது.

Recommend For You

Post Top Ad