அரசாணை மீறப்பட்டதா: கல்வித்துறை விசாரணை - Asiriyar.Net

Post Top Ad

Tuesday, May 5, 2020

அரசாணை மீறப்பட்டதா: கல்வித்துறை விசாரணை
அரசு நிறுத்தி வைத்த, ஈட்டிய விடுப்பு சம்பளம், சில கல்வி மாவட்டங்களில் வழங்கப்பட்டதாக, புகார் எழுந்துள்ளது. இது குறித்து விசாரணை நடத்த, பள்ளி கல்வி அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.


அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கான, அகவிலைப்படி உயர்வை,௨௦௨௧ ஜூலை வரை நிறுத்தி வைத்து, மத்திய, மாநில அரசுகள் உத்தரவிட்டுள்ளன. மேலும், ஈட்டிய விடுப்புக்கான சம்பளமும், ஓராண்டுக்கு நிறுத்தப்பட்டுள்ளது.

ஆசிரியர்களுக்கு ஆண்டுதோறும், கோடை விடுமுறை மற்றும் அரசு விடுமுறை நாட்களை தவிர, தற்செயல் விடுப்பு, 12 நாள்; ஈட்டிய விடுப்பு, 17; பண்டிகை விடுப்பு, 3 மற்றும் அரை சம்பள விடுப்பு, 2 நாள்உண்டு.மேலும், ஐந்து ஆண்டுகளுக்கு, 90 நாட்கள் மருத்துவவிடுப்பும் வழங்கப்பட்டுள்ளது.இதில், ஈட்டிய விடுப்பு நாட்களை எடுக்காமல், அரசுக்கு சமர்ப்பித்தால், அதற்கு, 50 சதவீத சம்பளம் வழங்கப்படும். இந்த சம்பளம் தான், ஓராண்டுக்கு நிறுத்தப்பட்டுள்ளது.இதற்கான உத்தரவு, ஏப்ரல், 27ல் வெளியான போதே, 'தற்போது விண்ணப்பித்தவர்களுக்கும், அதற்குரிய தொகையை வழங்கக் கூடாது' என, அரசு உத்தரவிட்டது.

ஆனால், அரசாணை வந்த, அடுத்த சில நிமிடங்களில், பல மாவட்டங்களில், ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு, ஈட்டிய விடுப்பு தொகை, அவசரமாக வழங்கப்பட்டுள்ளதாக, புகார்கள் எழுந்துள்ளன.கிருஷ்ணகிரி மாவட்டத்தில், ஒரு பள்ளியில், மூன்று ஆசிரியர்களுக்கு, ஒரே நாளில், ஈட்டிய விடுப்பு தொகை வழங்கப்பட்டுள்ளது. இது குறித்து, பள்ளி கல்வி அதிகாரிகள், விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Recommend For You

Post Top Ad