வங்கிகளில் பணம் எடுக்க புதிய விதிமுறைகள் அறிவிப்பு - Asiriyar.Net

Post Top Ad


Sunday, May 3, 2020

வங்கிகளில் பணம் எடுக்க புதிய விதிமுறைகள் அறிவிப்புவங்கிகளில் இருந்து பணம் எடுப்பதற்காக புதிய விதிமுறைகளை வங்கிகளின் சங்கம் அறிவித்துள்ளது.*

ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்பட்டிருக்கும் நிலையில் பணத்தை எடுக்க வாடிக்கையாளர்கள் வங்கிகளுக்கும் ஏடிஎம் மையங்களுக்கும் திரள்வதைத் தவிர்க்க ஏடிஎம் உள்ளிட்ட மின்னணுப் பரிமாற்றங்கள் வழியாக பணப்பரிமாற்றம் செய்யும்படி வாடிக்கையாளர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

பணம் எடுப்பதற்கான நாட்களை வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு தெரிவித்து வருகின்றன.

தங்கள் வங்கிக் கணக்கில் பூஜ்யம் மற்றும் 1 ஆகிய எண்களை கடைசி எண்ணாக வைத்துள்ள வாடிக்கையாளர்கள் மே 4ஆம் தேதி பணம் எடுக்கலாம்.

இதேபோல் கடைசி எண் 2 அல்லது 3 வைத்துள்ள வாடிக்கையாளர்கள் மே 5ஆம் தேதியும் 4 மற்றும் 5 எண் கடைசி எண்ணாக கொண்ட வாடிக்கையாளர்கள் மே 6ஆம் தேதியும் பணம் எடுக்கலாம் .

இதேபோன்று கடைசி எண் 6, அல்லது 7 கொண்டோர் 8ஆம் தேதியும் 8 அல்லது 9 கொண்டவர்கள் 11ஆம் தேதியும் பணம் பெறமுடியும்.

இந்த கட்டுப்பாடுகள் மே 11 வரை அமலில் இருக்கும்.
மே 11க்குப் பின்னர் எந்த வாடிக்கையாளரும் எப்போது வேண்டுமானாலும் பணத்தை எடுக்கலாம் என்று வங்கிகளின் சங்கம் அறிவித்துள்ளது.

Recommend For You

Post Top Ad