எஸ்பிஐ வாடிக்கையாளாரா நீங்க.. உங்களுக்கு ஒரு செம ஹேப்பி நியூஸ்..! - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Friday, May 8, 2020

எஸ்பிஐ வாடிக்கையாளாரா நீங்க.. உங்களுக்கு ஒரு செம ஹேப்பி நியூஸ்..!



நாட்டில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், மக்கள் தங்களது அத்தியாவசிய தேவைகளுக்கே கூட கஷ்டப்படும் நிலை இருந்து வருகிறது.

 இந்த நிலையில் இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ MCLR விகிதத்தினை 15 அடிப்படை புள்ளிகளை குறைத்துள்ளது. 


இந்த விகிதமானது மே 10 முதல் நடைமுறைக்கு வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது எஸ்பிஐ-யின் 12-வது குறைப்பாகும். இந்த எம்சிஎல்ஆர் விகிதம் குறைந்துள்ளதால் வீட்டுக்கடனுக்கான வட்டி விகிதம் குறையலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் நீங்கள் மாத மாதம் செலுத்தும் இஎம்ஐ சற்று குறையலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.



வட்டி விகிதம் குறைப்பு


வட்டி விகிதம் குறைப்பு இது கொரோனா பாதிப்பு மூலம் வீட்டிற்குள் முடங்கிக் கிடக்கும் மக்களுக்கு சற்று நிவாரணம் அளிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. எம்சிஎல்ஆர் விகிதத்தினை 15 அடிப்படை புள்ளிகளை குறைத்துள்ள நிலையில், ஓராண்டுக்கான வட்டி விகிதம் 7.25% ஆக குறைந்துள்ளது. இது முன்னர் 7.40% ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.

இஎம்ஐ குறையும் இந்த வட்டி விகிதம் குறைக்கப்பட்ட பின்னர், 25 லட்சத்துக்கான 30 வருட கடனுக்கு சுமார் 255 ரூபாய் குறையலாம் என்றும் எஸ்பிஐ தெரிவித்துள்ளது. ரிசர்வ் வங்கியானது ரெபோ விகிதத்தினை குறைக்கா விட்டாலும், எஸ்பிஐ தனது வட்டி விகிதத்தினை குறைத்துள்ளது அதன் வாடிக்கையாளர்களுக்கு மிகுந்த பயன் அளிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

வாடிக்கையாளர்களுக்கு மிகுந்த பயன் எஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு இந்த வட்டி குறைப்பானது மிக பயனுள்ளதாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இது தற்போது எஸ்பிஐ வாடிக்கையாளராக இருப்பவர்களுக்கும் சரி, இனி புதியதாக கடன் வாங்குபவர்களுக்கும் சரி இந்த வட்டி குறைப்பு பயன் அளிக்கும் என்றும் கூறப்படுகிறது. அதிலும் நடுத்தர மக்களுக்கு இந்த வட்டி குறைப்பு மிக பயன் அளிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

வட்டி குறையும் கடன்களுக்கான வட்டி விகிதம் குறைந்துள்ள நிலையில், அதே நேரம் பிக்ஸ்டு டெபாசிட்களுக்கான வட்டி விகிதமும் குறைந்துள்ளது. இதனால் டெபாசிட்கள் மூலம் கிடைக்கும் வட்டி விகிதம் குறையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஒரு புறம் கடனுக்கான வட்டி விகிதம் குறைந்தாலும், வங்கியில் டெபாசிட் வைப்புகளுக்கு வட்டி குறைந்திருப்பது, வாடிக்கையாளர்களிடையே சற்று கவலையை ஏற்படுத்தியுள்ளது.

Post Top Ad