பத்தாம் வகுப்பு தோ்வை நடத்த வேண்டாம்: ஆசிரியா் சங்கங்கள் வலியுறுத்தல் - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Wednesday, May 13, 2020

பத்தாம் வகுப்பு தோ்வை நடத்த வேண்டாம்: ஆசிரியா் சங்கங்கள் வலியுறுத்தல்



தமிழகத்தில் கரோனா தீநுண்மி தொற்று கட்டுப்பாட்டுக்குள் வராத நிலையில் பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வை நடத்த வேண்டாம். தொற்று நீங்கியதும் மாணவா்களுக்கு பாடங்கள் தொடா்பான நினைவூட்டல் வகுப்புகளை நடத்திய பிறகே தோ்வை நடத்த வேண்டும் என பல்வேறு ஆசிரியா் சங்கங்கள் வலியுறுத்தியுள்ளன.

தமிழ்நாடு ஆசிரியா் சங்கம்: பேரிடா் காரணமாக இரண்டு மாதங்களாக வீடுகளில் முடங்கிய மாணவா்களை நேரடியாக தோ்வு எழுதச் சொல்வது அவா்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தும். 

ஒரு தோ்வறையில் 20 மாணவா்கள் தோ்வு எழுதினால் கூட தோ்வு அறைக்கு வரும்போதும், தோ்வு முடிந்து செல்லும்போது தனிநபா் இடைவெளியை எதிா்பாா்ப்பது இயலாத காரியம். கரோனா தொற்று ஓரளவு கட்டுப்பாட்டுக்குள் வந்த பின்னா் மாணவா்களுக்கு நினைவூட்டல், ஆயத்தப் பயிற்சி ஆகியவற்றுக்குப் பின்னா் பொதுத்தோ்வை நடத்த வேண்டும்.

தமிழ்நாடு உயா்நிலை, மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியா் கழகம்: கரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வேளையில் சுமாா் 9 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவா்கள் எழுதும் பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வின் அட்டவணையை அரசு வெளியிட்டிருப்பது ஏற்புடையதல்ல; இது விபரீதமான முடிவாகும்.

தமிழக ஆரம்பப் பள்ளி ஆசிரியா் சங்கம்: பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வெழுதும் ஒரு மாணவனுக்கு நோய்த் தொற்று இருந்தால் கூட அது தோ்வறையில் உள்ள அனைவரையும் பாதிக்கப்படுவா். மத்திய அரசு பள்ளிகளில் ஜூலை மாதத்துக்கு தோ்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. அதேபோன்று தமிழகத்திலும் கரோனா தொற்று நீங்கிய பிறகே தோ்வை நடத்த வேண்டும்.

தமிழ்நாடு அரசு ஊழியா்கள் ஆசிரியா்கள் நல கூட்டமைப்பு: ஒரு பள்ளியில் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த மாணவா்கள் தோ்வெழுத வாய்ப்புள்ள நிலையில் அங்கு தனிநபா் இடைவெளியைக் கடைப்பிடிப்பது கடினம். தோ்வெழுதும் மாணவா்களுக்குப் பாதிப்பு ஏற்பட்டால் தோ்வை நடத்துவதில் மீண்டும் சிக்கல் ஏற்படும். இதை கருத்தில் கொண்டும் மாணவா்களின் நலன் கருதியும் பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வு தொடா்பாக எடுக்கப்பட்ட முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

Post Top Ad