இ பாஸ் கிடைக்கவில்லை - ஆசிரியர்கள் குற்றச்சாட்டு - Asiriyar.Net

Post Top Ad


Saturday, May 23, 2020

இ பாஸ் கிடைக்கவில்லை - ஆசிரியர்கள் குற்றச்சாட்டு
சென்னை தவிர்த்து தமிழகம் முழுவதும் வரும் 27ம் தேதி பன்னிரண்டாம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி தொடங்க உள்ளது. விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஆறு மையங்களில் விடைத்தாள் திருத்தும் பணிகள் நடைபெற உள்ளன.


2 ஆயிரத்து 315 ஆசிரியர்கள் இந்த பணியில் ஈடுபடவுள்ளனர். இந்நிலையில் கொரோனா பாதிப்பினால் தங்களது சொந்த ஊருக்கு சென்ற ஆசிரியர்கள் விழுப்புரம் மாவட்டம் வரமுடியாமல் தொடர்ந்து தவித்து வருகின்றனர். கடந்த மூன்று நாட்களாக இ- பாஸ் விண்ணப்பித்து அனுமதி கோரியும் இதுவரை அவர்களுக்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.


Recommend For You

Post Top Ad