அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது 59 - ஒரு மாற்றுப்பார்வை அலசல் - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Monday, May 11, 2020

அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது 59 - ஒரு மாற்றுப்பார்வை அலசல்



தமிழ்நாடு அரசு ஆசிரியர் ,அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதினை 58 இல் இருந்து 59 ஆக உயர்த்தி உள்ளது. இதனை சிலர் எதிர்க்கின்றனர்... பலர் வரவேற்கின்றனர். மத்திய அரசு பணியாளர்களின் ஓய்வு பெறும் வயது 60. இதனை புரிந்து கொள்ளாமல் சிலர் தமிழக அரசு ஏதோ தவறு செய்துவிட்டது போல் ஒரு மாயத்தோற்றத்தை தோற்றுவிக்க முயல்கின்றனர். அவர்களுக்கெல்லாம் ஒன்றினை கூறிக்கொள்கிறேன்...

அரசு எத்தனை வயதில் பணி ஓய்வு பெற வேண்டும் என்பதை சொல்லட்டும்..நீங்கள் எந்த வயதில் ஓய்வு பெற வேண்டும் என்று நினைக்கின்றீர்களோ அந்த வயதில் விஆர்எஸ் கொடுத்துவிட்டு போங்கள்.. இது தான் நியாயம்.. 59 வயது பிடிக்கவில்லையென்றால் 58 வயதில் சம்பந்தப்பட்டவர்கள் வி ஆர் எஸ் கொடுக்கவும். 

நாட்டு மக்கள் மேல் அக்கறை உள்ளவர்கள் 50,51,52,53, 54,55 வயதில் விஆர்எஸ் கொடுக்கலாம். இதற்கு அரசாங்கம் மறுப்பு தெரிவிக்கவில்லை. கடந்த 10 ஆண்டுகளுக்கு பின்பு இன்று தான் ஆசிரியருக்கும் அரசு ஊழியருக்கும் ஒரு நன்மை நடக்கிறது. அதனையும் கெடுத்து அனைவர் தலையிலும் மண்ணை வாரி போட்டு விடாதீர்கள். கடந்த 10 ஆண்டுகளாக அரசுக்கு எதிராக போராடி நெஞ்சில் ரணமும் உடம்பில் புண்ணும் ஜெயில் வாழ்க்கையும் பணம் இழப்பு தான் ஏற்பட்டுள்ளது. 

இதனை சரிப்படுத்த இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆகும் என்று தெரியாது. எனவே சம்பந்தப்பட்டவர்கள் உங்கள் விருப்பம் போல் ஓய்வினை முடிவு செய்து கொள்ளுங்கள் அரசாங்கம் ஓய்வு வயதினை 59 ஆக முடிவுசெய்துள்ளது. எனவே இளைஞர்களுக்கு நன்மை செய்வது போல் பாசாங்கு காட்டாதீர்கள். உண்மையை உணருங்கள் வெளி வேஷம் போடாதீர்கள்.



✍31.05.2020 க்கு பின்னர் ஓய்வு பெறுபவர்கள் 59 வயதில் தான் ஓய்வு பெற வேண்டும் அரசு அறிவிப்பு. விருப்பம் இல்லாதவர்கள் இளைஞர்கள் மேல் அக்கறை காட்டுபவர்கள் அதே தேதியில் விஆர்எஸ் கொடுக்கலாமே இதற்கு அரசு எதிர்க்க வில்லையே.

✍மத்திய அரசு பணியாளர்களின் ஓய்வு பெறும் வயது 60. மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வேண்டும் என்னும் போது ஓய்வு பெறும் வயது 60 ஆகத்தான் இருக்க வேண்டும். விவரம் ஆனவர்கள் சிந்தியுங்கள்.

✍ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் உறுதியாக சிபிஎஸ் ரத்து செய்யப்படும் பழைய ஓய்வூதிய முறை கொண்டு வரப்படும் அப்பொழுது பணிக்காலம் 29 ஆண்டுகள் இருப்பவர்களுக்கு இந்த ஒரு ஆண்டு (30 ஆண்டு பனிக்காலம்) அதாவது 59 வயது ஓய்வு என்பது முழு பென்ஷன் கிடைக்க வழிவகை செய்யும் (30 ஆண்டுகள் பணிபுரிந்தால் முழு ஓய்வூதியம்) சிந்தியுங்கள்...

✍ஜாக்டோ ஜியோ என்ற மாபெரும் அமைப்பு தமிழக முதலமைச்சர் அறிவித்துள்ள ஓய்வு பெறும் வயது 59 என்பதனை வரவேற்று பாராட்டி இருக்க வேண்டும்.இதன் மூலம் இராஜதந்திர நடவடிக்கையாக முதல்வருடனான தொடர்பை பயன்படுத்தி நல்லிணக்கம் ஆக மாறி காலங்காலமாக போராடிக் கொண்டிருக்கும் உரிமைகளை மீட்டெடுக்க நல்வாய்ப்பு அமைந்திருக்கும். 

மேலும் போராட்ட களத்தில் சிறை சென்று தற்பொழுது வரை ஆறாத் துயரத்தில் வீழ்ந்து கிடக்கும் சுமார் 5 ஆயிரத்திற்கு மேற்பட்ட ஆசிரியர்கள் அரசு ஊழியர்களின் ஒழுங்கு நடவடிக்கை செயல்முறைகளை ரத்து செய்ய வழிவகை ஏற்படுத்தியிருக்கலாம். ஏன் என்று தெரியவில்லை அரசாங்கம் நல்லதை செய்தாலும் ஒரு கூட்டம் எதிர்க்கிறது. 

கெட்டதை செய்தாலும் அதே கூட்டம் எதிர்க்கிறது இதில் என்ன வேடிக்கை என்றால் பாவம் உண்மையான நல்லவர்களை பலிகடா ஆக்கிக் கொண்டிருக்கிறார்கள்.ஆசிரியர்களே அரசு ஊழியர்களே சிந்தியுங்கள்.

✍இந்த ஆண்டு பணி ஓய்வு பெறும் சிபிஎஸ் திட்டத்தில் உள்ள ஆசிரியர் அரசு ஊழியர்கள் மேலும் ஓராண்டு பணிபுரிய வாய்ப்பு கிட்டியுள்ளது. ஏனென்றால் ஓய்வு பெற்ற பின் செங்கல் சூளையில் வேலை பார்க்கும் ஆசிரியர் அரசு ஊழியர்களை நாம் பார்த்துள்ளோம். எனவே ஆசிரியர்களே அரசு ஊழியர்களே சிந்தியுங்கள் செயல்படுங்கள். போலி வேஷம் போட்டு ஆசிரியர்களையும் அரசு ஊழியர்களையும் சிந்திக்க விடாமல் குழப்பிக் கொண்டிருக்கும் நபர்களிடமிருந்து இனி விலகியே இருங்கள்.

✍ ஒன்றைப் பெறுவது கடினம்! பெற்றதை இழக்காமல் காப்பது அதைவிட கடினம்! பல ஆண்டுகளாக போராடிப் பெற்றதை இழந்து கொண்டே இருக்கிறோம். தற்போது தான் ஒன்று கிடைத்திருக்கிறது.... 

ஆசிரியர்களே! அரசு ஊழியர்களே! சிந்தியுங்கள் அன்பு உடன்பிறப்புகளே!

Post Top Ad