ஓய்வு பெறும் வயது 59ஆக அதிகரிப்பு - மறுபரிசீலனை செய்ய ஆசிரியர் சங்கம் வேண்டுகோள் - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Thursday, May 7, 2020

ஓய்வு பெறும் வயது 59ஆக அதிகரிப்பு - மறுபரிசீலனை செய்ய ஆசிரியர் சங்கம் வேண்டுகோள்










தமிழக அரசுப் பணிகளில் இருந்து ஓய்வு பெறும் வயது 58லிருந்து 59ஆக அதிகரிப்பு*
வேலைவாய்ப்பு தள்ளிப்போகும். மறுபரிசீலனை செய்ய தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் வேண்டுகோள்.

மாநிலத்தலைவர் பி.கே.இளமாறன் அறிக்கை.



தமிழ்நாடு அரசில் பணிபுரியும் ஆசிரியர்,அரசு ஊழியர்கள் பணி ஓய்வு வயது 58 லிருந்து 59 ஆக மாற்றி ஓராண்டு நீட்டிப்பு வழங்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.அரசாணையில் தமிழக அரசுப்பணியில் பணிபுரிந்துவரும் அலுவலர்கள், ஊழியர்கள் அரசுப் பள்ளி, கல்லூரிகள், பொது நிறுவன பணியாளர் அனைவருக்கும் பொருந்தும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒருபுறம் ஆசிரியர்கள்-அரசு ஊழியர்களுக்கு சாதகமாக அமைந்துள்ளது. தற்போது அகவிலைப்படி, ஒன்றரை ஆண்டுக்கு ரத்துசெய்யப்பட்டுள்ளதால் ஓராண்டு நீட்டிப்பினால் ஓய்வூதியம் குறைவை ஈடுசெய்யலாம். ஆனால் பல லட்சம் இளைஞர்கள் படித்துவிட்டு வேலைக்காக காத்திருக்கும் நிலையே நிலவிவருகிறது. 


மேலும் குறிப்பாக ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சிப்பெற்று சுமார் 70,000 பேர் வேலைக்கு காத்திருக்கும் நிலையில் அந்த எதிர்பார்ப்பு ஓராண்டு தள்ளிப்போகும் இன்னும் பல பிரச்சினைகளை சந்திப்பதோடு மனஉளைச்சலையும் ஏற்படுத்தும். எதிர்கால கனவுகளையும் நசுக்கும் . 

ஆகையால், தமிழக அரசுப்பணியாளர்களின் ஓய்வுவயது 58 லிருந்து 59 ஆக உயர்த்தியதை மறுபரிசீலனை செய்ய ஆவனசெய்யும்படி தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் பணிவுடள் வேண்டுகிறேன்.


பி.கே.இளமாறன்
மாநிலத்தலைவர்
தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் 9884586716

Post Top Ad