10ம் வகுப்புத் தேர்வு திட்டமிட்டபடி நடைபெறும் - அமைச்சர் செங்கோட்டையன் - Asiriyar.Net

Post Top Ad


Saturday, May 30, 2020

10ம் வகுப்புத் தேர்வு திட்டமிட்டபடி நடைபெறும் - அமைச்சர் செங்கோட்டையன்தமிழகத்தில் உள்ள அரசு உயர்நிலை மற்றும் மேல் நிலைப்பள்ளிகள் பத்தாம் வகுப்பு தேர்வுக்காக தயாராகி வருகின்றன.பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ஜூன் 15ம் தேதி துவங்கப்படும் என, அரசு அறிவித்துள்ளது. 


இந்தாண்டு அனைத்து பள்ளிகளிலும் தேர்வு மையம் செயல்படும் என்பதால், பள்ளிகள்தோறும் துாய்மைப்பணிகள் நடந்து வருகின்றன வகுப்பறை மற்றும் பள்ளி வளாகங்களில் கிருமி நாசினிகள் தெளிக்கப்பட்டு வருகின்றன.

இருந்தபோதும் தேர்வு நடைபெறுமா என்ற சந்தேகம் இன்னும் நிலவுவதால், அமைச்சர் செங்கோட்டையனிடம் இதுகுறித்து கேட்டபோது தேர்வு திட்டமிட்டபடி நடைபெறும் என தெரிவித்தார்.

வீடியோவைக் காண

Recommend For You

Post Top Ad