கொரோனாவிற்கு மருந்து உண்மை நிலை என்ன? - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Monday, April 6, 2020

கொரோனாவிற்கு மருந்து உண்மை நிலை என்ன?


கொரோனாவிற்கு மருந்து


உண்மை நிலை என்ன

கொரோனாவிற்கு மருந்து கண்டுபிடிக்க உலக அளவில் 
35 பன்னாட்டு நிறுவனங்கள் ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கின்றன.

நான்கு படிநிலைகள்

இந்த ஆராய்ச்சிகள் எல்லாம் முடிந்து கொரோனாவிற்கு எதிராக மருந்து கண்டுபிடிக்கப்பட்டாலும் அது உடனே பயன்பாட்டிற்கு வராது. இதற்கு மொத்தம் நான்கு படிநிலைகள் உள்ளது.

முதலில் விலங்குகளிடம் சோதனை செய்ய வேண்டும்.

அதன்பின் இரண்டு அல்லது மூன்று மனிதர்களிடம் சோதனை செய்ய வேண்டும்.

அதன்பின் நூறு - இருநூறு மனிதர்களிடம் சோதனை செய்ய வேண்டும்.

அதன்பின் வெவ்வேறு நாட்டை சேர்ந்த பல்லாயிரம் பேரிடம் சோதனை செய்ய வேண்டும்.

*ஆனால் புதிய மருந்து என்பதால் கஷ்டம்*

இந்த சோதனைகளில் எல்லாம் முடிவுகள் ஒரே மாதிரி இருக்க வேண்டும். 
அனைத்து நாட்டு மக்களுக்கும் இந்த மருந்து ஏற்றதாக இருக்க வேண்டும். அதேபோல் இதன் மூலம் பக்க விளைவுகள் எதுவும் ஏற்பட கூடாது. ஆனால் இதெல்லாம் வேகமாக நடப்பது மிகவும் கடினம். 
இந்த படிநிலைகள் ஒவ்வொன்றும் நடக்க பல மாதங்கள் ஆகும். இது அவ்வளவு சாதாரண விஷயம் இல்லை.

முதலில் இருந்து தொடங்க வேண்டும்

அதில் எங்காவது ஒரு புள்ளியில் சோதனை தோல்வி அடைந்தாலும் முதலில் இருந்து சோதனையை தொடங்க வேண்டும். அதனால் குறைந்தபட்சம் இந்த மருந்தை சந்தைக்கு கொண்டு வர 18 மாதங்கள் ஆகும். ஆனால் இது குறைந்தபட்ச காலம் ஆகும். உண்மையில் மருந்து பயன்பாட்டிற்கு வர இதை விட அதிக காலம் எடுக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இதெல்லாம் சோதனையின் வேகத்தை பொறுத்தது.

*மருந்து கிடைக்காது*

மருந்து சோதனை எல்லாம் முடிந்தாலும் அதற்கு பின் ஒவ்வொரு நாட்டு அரசும் மருந்துக்கு அனுமதி அளிக்க வேண்டும். உலக சுகாதார மையம் இதை பாதுகாப்பானது என்று கூற வேண்டும். அதேபோல் உலகம் முழுக்க இருக்கும் மக்கள் தொகைக்கு ஏற்றபடி, இந்த மருந்துகளை வேகமாக உற்பத்தி செய்து, அதை மக்களின் தேவைக்கு ஏற்றபடி பிரித்து கொடுக்க வேண்டும். இதெல்லாம் மிகவும் சிரமமான விஷயம் என்பது குறிப்பிடத்தக்கது.


Stay Home
Stay Safe
Stop Corona

Post Top Ad