நுரையீரலில் தேங்கியிருக்கும் சளியை வெளியேற்ற!. இதை செய்யுங்கள் போதும் - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Thursday, March 25, 2021

நுரையீரலில் தேங்கியிருக்கும் சளியை வெளியேற்ற!. இதை செய்யுங்கள் போதும்






நுரையீரல் பாதித்தாலே சளி, இருமல், காய்ச்சல் உட்பட பல பிரச்சனைகளுக்கு ஆளாக நேரிடுகிறது.நம் நுரையீரலை ஆரோக்கியமாக வைத்திருந்தாலே பல நோய்களிலிருந்து விடுபடலாம்.அதேபோல் நம் உடலுக்கு சளியும் தேவை. ஏனெனில் அது உடலுக்கு பாதுகாப்பு வளையமாக செயல்படுகிறது.

சில பாக்டீரியா அல்லது வைரஸை சுவாசிக்கும்போது, அது நுரையீரலில் உள்ள சளியால் சிக்கிக்கொள்ளும்.இதனால் நம் உடலுக்குள் செல்வதைத் தடுக்கிறது. இந்த சளியானது பின்னர் தும்மல், இருமல் அல்லது மூக்கு ஒழுகுதல் மூலம் வெளியேறுகிறது.அதிகப்படியான சளியின் காரணமாகவே பல பிரச்சனைகள் நேர்கின்றன.

இதற்கான வைத்திய முறைகள் சில,

ஒரு ஸ்பூன் வெந்தயத்துடன் ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி சுமார் 4 முதல் 5 நிமிடங்கள் கொதிக்க விடவும், இதனை தினமும் குடித்து வந்தால் சளி கரைந்து வெளியேறும்.நன்கு இழுத்து மூச்சு விடுதல் பயிற்சி அல்லது உடற்பயிற்சி எதுவானாலும் நன்கு மூச்சை இழுத்து விடும்போது நுரையீரல் சளி கரைந்து வெளியேற வாய்ப்பு உள்ளது.


கொதிக்கும் நீரில் அடிக்கடி ஆவி பிடித்தாலும் சளி கரைந்து வெளியேறும்.தண்ணீரில் உப்பு கலந்து கொதிக்கவிடுங்கள். வெதுவெதுப்பாக இருக்கும்போது வாயில் ஊற்றி கொப்பளிக்க சளி குறைந்து நுரையீரல் ஆரோக்கிய வாய்ப்பு உள்ளது.

Post Top Ad