கரோனா பாதிப்புகளுக்கு நடுவே, தமிழக மக்களுக்கு ஒரு நற்செய்தி! - Asiriyar.Net

Post Top Ad


Thursday, April 16, 2020

கரோனா பாதிப்புகளுக்கு நடுவே, தமிழக மக்களுக்கு ஒரு நற்செய்தி!

உலக அளவில் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள கரோனா, தற்போது இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் மே மாதம் 3- ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இருந்தபோதிலும் இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இந்தியாவில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 11,439 ஆகவும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 377 ஆகவும், இந்த பாதிப்பிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,306 ஆகவும் உள்ளது. அதிகபடியானோர் கரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளது இந்திய அளவில் பெரிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகம் உள்ள மாநிலங்களின் பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ள தமிழகத்திலிருந்து, அதுவும் ஈரோடு என்ற ஒரே மாவட்டத்தில், இன்று 13 பேர் கரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்துள்ளது, தமிழக மக்கள் மத்தியில் இருந்த கரோனா அச்சத்தை தளர்த்தியுள்ளது. ஈரோட்டில் 13 பேர் குணமடைந்துள்ளனர் என்ற அதிகாரப்பூர்வ தகவலை அம்மாவட்ட ஆட்சியர் கதிரவன் தெரிவித்துள்ளார்.

Recommend For You

Post Top Ad