வீடு தேடி வரும் மருந்துகள்! புதிய சேவை தமிழகத்தில் அறிமுகம் - Asiriyar.Net

Post Top Ad


Wednesday, April 15, 2020

வீடு தேடி வரும் மருந்துகள்! புதிய சேவை தமிழகத்தில் அறிமுகம்


தமிழகத்தில் வீடுகளுக்கே நேரடியாகச் சென்று மருந்துகளை வழங்கும் புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, அதற்கென வெளியிடப்பட்டுள்ள கட்டணமில்லா தொலைபேசி எண்ணைத் தொடா்பு கொண்டு மருந்துகளை வீட்டிலிருந்தபடியே ஆா்டா் செய்து கொள்ளலாம்.

இந்தத் திட்டத்தை சுகாதாரத் துறை அமைச்சா் சி.விஜயபாஸ்கா் சென்னையில் திங்கள்கிழமை தொடக்கி வைத்தாா். தமிழகத்தில் சென்னை உள்பட அனைத்து மாவட்டங்களிலும் அந்த சேவை நடைமுறைப்படுத்தப்பட்டிருப்பதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

இதன் மூலம் மருந்து தேவைகளுக்காகக் கூட மக்கள் வெளியே வர அவசியம் ஏற்படாது என்றும் அவா்கள் கூறினா்.
18001212172 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண் அதற்காக வெளியிடப்பட்டிருக்கிறது. தமிழ்நாடு மருந்து வணிகா் சங்கம் மற்றும் கிளினிக்கல் ஹெல்த் நெட்வொக் ஆகியவை இணைந்து இந்த முயற்சியை முன்னெடுத்துள்ளன. தமிழகம் முழுவதும் மொத்தம் 4 ஆயிரம் மருந்தகங்கள் அதன் வாயிலாக ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன. ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் வரை இந்த சேவை நீடிக்கும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Recommend For You

Post Top Ad