வருங்கால வைப்பு நிதியில் இருந்து 75 சதவீதம் பணம் எடுக்கு குவியும் விண்ணப்பங்கள்! - Asiriyar.Net

Post Top Ad


Saturday, April 11, 2020

வருங்கால வைப்பு நிதியில் இருந்து 75 சதவீதம் பணம் எடுக்கு குவியும் விண்ணப்பங்கள்!
வருங்கால வைப்பு நிதியில் இருந்து 75 சதவீதம் பணம் எடுக்கலாம் என மத்திய அரசு அறிவிப்பு...

 கொரோனா தொற்றினால் ஏற்பட்டுள்ள அவசர நிலை காரணமாக வருங்கால வைப்பு நிதியில் இருந்து பணம் எடுத்துக் கொள்ளலாம் என்ற அறிவிப்பைத் தொடர்ந்து 10 நாட்களில் 280 கோடி ரூபாய் எடுக்கப்பட்டுள்ளதாக தொழிலாளர் நலத்துறை தெரிவித்துள்ளது.

பிரதமரின் காரிப் கல்யாண் யோஜனா தொகுப்பின் கீழ் தொழிலாளர்கள் வைப்பு நிதியில் இருந்து 75 விழுக்காடு பணத்தை திரும்பப் பெற்றுக் கொள்ளலாம் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்திருந்தார்.


இந்தத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து நாடு முழுவதும் ஒரு லட்சத்து 37 ஆயிரம் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளதாகவும், அதன் மூலம் 279 கோடியே 65 லட்சம் ரூபாய் அனுப்பியுள்ளதாக தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு தெரிவித்துள்ளது...

Recommend For You

Post Top Ad