தமிழகத்தில் 110 தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சை.. தமிழக அரசு உத்தரவு - Asiriyar.Net

Post Top Ad


Sunday, April 5, 2020

தமிழகத்தில் 110 தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சை.. தமிழக அரசு உத்தரவு


 கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், 110 தனியார் மருத்துவமனைகளில் கொரோனா தொடர்பான சிகிச்சையைப் பெறலாம் என அரசின் சுகாதார நலத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.


தடுப்பூசி போட்டா கொரோனா வராது | கொரோனா Hope | Quarantine | LockDown

இதுதொடர்பான அரசு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. தற்போது அரசு மருத்துவமனைகளில் மட்டுமே கொரோனாவைரஸ் நோய்க்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தனியார் மருத்துவமனைகளையும் இதில் ஈடுபடுத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது.


கொரோனாவைரஸ் பரவல் அதிகரித்து வருவதைக் கணக்கில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை எடுத்துக் கொள்ள விரும்பும் நோயாளிகள் அரசு அங்கீகரித்துள்ள தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை மேற்கொள்ளலாம். இங்கு தங்களது சொந்த செலவில் நோயாளிகள் சிகிச்சை பெற வேண்டும்.

அரசு நிர்ணயித்துள்ள சிகிச்சை முறைகளை இந்த தனியார் மருத்துவமனைகள் பின்பற்ற வேண்டும். தாங்கள் அளித்து வரும் சிகிச்சை, நோயாளிகள் குறித்த விவரத்தை தினசரி அறிக்கையாக தமிழக அரசின் பொது சுகாதாரம் மற்றும் தொற்றுநோய் மருத்துவ இயக்குநருக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

தமிழக அரசு தற்போது அறிவித்துள்ள தனியார் மருத்துவமனைகள் குறித்த விவரத்தில் அவ்வப்போது தேவையான மாற்றங்கள் செய்யப்படும் என்றும் சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

மாவட்ட வாரியாக தனியார் மருத்துவ கல்லூரிகள் விவரம்:

கோவை

கற்பகம் மருத்துவ அறிவியல் மற்றும் ஆய்வுக் கழக மருத்துவமனை, ஒத்தகல் மண்டபம்.
கேஎம்சிஎச் மருத்துவ அறிவியல் மற்றும் ஆய்வுக் கழக மருத்துவமனை, அவினாசி சாலை.
பிஎஸ்ஜி மருத்துவ அறிவியல் மற்றும் ஆய்வுக் கழக மருத்துவமனை, பீளமேடு.
காஞ்சிபுரம்/செங்கல்பட்டு

பாரத் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, சேலையூர்.
செட்டிநாடு மருத்துவ ஆய்வுக் கழக மருத்துவமனை, கேளம்பாக்கம்
கற்பக விநாயகர் மருத்துவ அறிவியல் மற்றும் ஆய்வுக் கழக மருத்துவமனை, மதுராந்தகம்.
மாதா மருத்துவக் கல்லூரி ஆய்வுக் கழகம், கோவூர்.
மீனாட்சி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் ஆய்வுக் கழகம், ஏனாத்தூர்.
மேல்மருவத்தூர் ஆதி பராசக்தி மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை.
பனிமலர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, பூந்தமல்லி.
சவீதா மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை, தண்டலம்.
ஸ்ரீசத்ய சாய் மருத்துவக் கல்லூரி, ஆய்வுக் கழகம், அம்மாப்பேட்டை.
ஸ்ரீ பாலாஜி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, குரோம்பேட்டை
ஸ்ரீ முத்துக்குரன் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, மாங்காடு.
எஸ்ஆர்எம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் ஆய்வுக் கழகம், காட்டாங்கொளத்தூர்.
தாகூர் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை, ரத்தினமங்கலம்
கன்னியாகுமரி

ஸ்ரீமூகாம்பிகா மருத்துவ அறிவியல் கழகம், குலசேகரம்.

மதுரை

வேலம்மாள் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் ஆய்வுக் கழகம், அனுப்பானடி.

பெரம்பலூர்

தனலட்சுமி சீனிவாசன் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை, சிறுவாச்சூர்.

சேலம்

அன்னபூர்ணா மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை, கொம்பாடிப்பட்டி.
விநாயகா மிஷன்ஸ் கிருபானந்த வாரியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, சீரங்கப்பாடி.
திருவள்ளூர்

ஏசிஎஸ் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை, வேலப்பன்சாவடி.
ஸ்ரீராமச்சந்திரா மருத்துவக் கல்லூரி ஆய்வுக் கழகம், போரூர்.
திருச்சி

திருச்சி எஸ்ஆர்எம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் ஆய்வு மையம், இருங்காளூர்.

வேலூர்

கிறிஸ்டியன் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை.

மாவட்ட வாரியாக தனியார் மருத்துவமனைகள் விவரம்:

அரியலூர்

ஏ.எஸ். இமேஜிங் சென்டர் மற்றும் மருத்துவமனை, அரியலூர்
அரியலூர் கோல்டன் மருத்துவமனை பிரைவேட் லிமிடெட்
சென்னை

போர்டிஸ் மலர் மருத்துவமனை, அடையாறு
தி வாலண்டரி ஹெல்த் சர்வீசஸ், தரமணி
பிரசாந்த் மருத்துவமனை- வேளச்சேரி
பில்ராத் மருத்துவமனை, ஷெனாய் நகர்
காஞ்சி காமகோடி சைல்ட் டிரஸ்ட் மருத்துவமனை, நுங்கம்பாக்கம்
சிஎஸ்ஐ கல்யாணி பொது மருத்துவமனை, மயிலாப்பூர்
காவேரி மருத்துவமனை, ஆழ்வார்பேட்டை
மியாட் மருத்துவமனை, மணப்பாக்கம்
விஜயா மருத்துவமனை, வடபழனி
ஜெம் மருத்துவமனை, பெருங்குடி
டாக்டர் காமாட்சி மெமோரியல் மருத்துவமனை, பள்ளிக்கரணை
கோயமுத்தூர்

ஜி குப்புசாமி நாயுடு மெமோரியல் (ஜிகேஎன்எம்) மருத்துவமனை, கோவை
ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை, கோவை
கே.ஜி. மருத்துவமனை, கோவை
கொங்குநாடு மருத்துவமனை, கோவை
கடலூர்

கிருஷ்ணா மருத்துவமனை, கடலூர்
சுபா ஆனந்தம் மெடிக்கல் சென்டர், கடலூர்
தருமபுரி

சுபா மருத்துவமனை, தருமபுரி
ஓம் சக்தி மருத்துவமனை, தருமபுரி
டிஎன்பி பாலிகிளீனிக், தருமபுரி
திண்டுக்கல்

திண்டுக்கல் லியோனார்ட் மருத்துவமனை, வத்தலகுண்டு
செயின்ட் ஜோசப் மருத்துவமனை, திண்டுக்கல்
வேல் பல்நோக்கு மருத்துவமனை, பழனி
கிறிஸ்டியன் ஃபெல்லோஷிப் கம்யூனிட்டி சென்டர்- அம்பிலிக்கல்
ஈரோடு

சுதா மருத்துவமனை, பெருந்துறை ரோடு, ஈரோடு
ஈரோடு மெடிக்கல் சென்டர், பெருந்துறை சாலை, ஈரோடு
மாருதி மெடிக்கல் சென்டர் மற்றும் மருத்துவமனை, பெருந்துறை சாலை, ஈரோடு
கேர் 24 மெடிக்கல் சென்டர் மற்றும் மருத்துவமனை, பெருந்துறை சாலை, ஈரோடு
காஞ்சிபுரம்/செங்கல்பட்டு

செட்டிநாடு சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை, கேளம்பாக்கம்
டாக்டர் ரீலா இன்ஸ்டியூட் மற்றும் மெடிக்கல் சென்டர், குரோம்பேட்டை
கன்னியாகுமரி

சிஎஸ்ஐ மிஷன் மருத்துவமனை- நெய்யூர், கன்னியாகுமரி
ஹோலி கிராஸ் மருத்துவமனை- நாகர்கோவில்
கெர்டி குட்பீரி அகஸ்தியர் முனி சைல்டு கேர் சென்டர், வெல்லமடம்
பென்ஷம் மருத்துவமனை, நாகர்கோவில்
டாக்டர் ஜெயசங்கரன் மெடிக்கல் டிரஸ்ட் மருத்துவமனை, நாகர்கோவில்
கரூர்

அபிராமி மருத்துவமனை, கரூர்
அமராவதி மருத்துவமனை, கரூர்
அப்பல்லோ லோகோ மருத்துவமனை, கரூர்
கிருஷ்ணகிரி

ஸ்ரீ சந்திரசேகர மருத்துவமனை, ஓசூர்
காவேரி மருத்துவமனை, ஓசூர்
மதுரை

ராகவேந்திரா மருத்துவமனை, காமராஜர் சாலை, மதுரை
சரவணா மருத்துவமனை, நரிமேடு
பிரீத்தி மருத்துவமனை பிரைவேட் லிமிடெட், ஊத்தங்குடி
தேவதாஸ் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை, சர்வேயர் காலனி, மதுரை
லட்சுமணா மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை, பைகாரா, மதுரை
குரு மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை, பாண்டி கோவில் ரிங் ரோடு, மதுரை
நாகப்பட்டினம்

அருண் பிரியா நர்சிங் ஹோம், மயிலாடுதுறை
கோஹஜ் மருத்துவமனை, காமேஸ்வரம்
சாந்தி நர்ஸிங் ஹோம், மயிலாடுதுறை
ராம் எலும்பு மருத்துவமனை, மயிலாடுதுறை
விஷ்ணு மருத்துவமனை, நாகை
நாமக்கல்

தங்கம் மருத்துவமனை, நாமக்கல்
மகாராஜா ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை, மோகனூர் சாலை, நாமக்கல்
விவேகானந்தா மெடிக்கல் கேர், திருச்செங்கோடு
அரவிந்த் மருத்துவமனை, ரங்கர் சன்னிதி தெரு, நாமக்கல்
எம். எம். மருத்துவமனை, நாமக்கல்
புதுக்கோட்டை

லட்சுமி நர்ஸிங் ஹோம், புதுக்கோட்டை
முத்து மீனாட்சி மருத்துவமனை, புதுக்கோட்டை
ஸ்ரீ துர்கா சர்ஜிக்கல் கிளீனிக் மற்றும் ஆராய்ச்சி மையம், பொன்னமராவதி
ஸ்ரீ விஜய் மருத்துவமனை, மணமேல்குடி
ராமநாதபுரம்

ஆசி மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை, ராமநாதபுரம்
கனகமணி மருத்துவமனை, ராமநாதபுரம்
சேலம்

தரண் மருத்துவமனை, சேலம்
எஸ்கேஎஸ் மருத்துவமனை, சேலம்
ஸ்ரீ கோகுலம் மருத்துவமனை, சேலம்
எஸ்.பி.எம்.எம். மருத்துவமனை, அம்மாப்பேட்டை, சேலம்
குறிஞ்சி மருத்துவமனை, சேலம்
மணிப்பால் மருத்துவமனைகள் சேலம் டால்மியா போர்டு, வெள்ளக்கல்பட்டி
சிவகங்கை

செந்தில் மருத்துவமனை, தேவக்கோட்டை
அப்பல்லோ மருத்துவமனை, காரைக்குடி
தஞ்சாவூர்

தியோசீஸ் ஆப் தஞ்சாவூர் சொசைட்டி- அவர் லேடி ஆஃப் ஹெல்த் மருத்துவமனை, தஞ்சாவூர்
கே. ஜி. மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை, தஞ்சாவூர்
மீனாட்டி மல்டிஸ்பெஷாலிட்டி மருத்துவமனை, தஞ்சாவூர்
அன்பு மருத்துவமனை, கும்பகோணம்
நீலகிரி

நான்கெம் மருத்துவமனை, குன்னூர்
அஸ்வினி டிரைபல் மருத்துவமனை, கூடலூர்
சகாயமாதா மருத்துவமனை, குன்னூர்
தேனி

என்.ஆர்.டி மருத்துவமனை, தேனி
டி.என்.கே.எச்.என்.வி மருத்துவமனை, தேனி
கிருஷ்ணம்மாள் மெமோரியல் மருத்துவமனை, வடவீரநாய்க்கன்பட்டி
திருவள்ளூர்

சுகம் மருத்துவமனை, திருவொற்றியூர்
டாக்டர் மேத்தா மருத்துவமனை, வேலப்பன்சாவடி
அப்பல்லோ மருத்துவமனை, அயனம்பாக்கம்
ஆகாஷ் மருத்துவமனை, திருவொற்றியூர்
திருவண்ணாமலை

ரமண மகரிஷி ரங்கம்மாள் மருத்துவமனை, திருவண்ணாமலை

திருவாரூர்

திருவாரூர் மெடிக்கல் சென்டர், திருவாரூர்
நவஜீவன் மருத்துவமனை, திருவாரூர்
தூத்துக்குடி

ஏ.வி.எம். மருத்துவமனை, தூத்துக்குடி
சேக்ரட் ஹார்ட் மருத்துவமனை, தூத்துக்குடி
திருநெல்வேலி/தென்காசி

ஷிஃபா மருத்துவமனை, திருநெல்வேலி
கேலக்ஸி மருத்துவமனை, திருநெல்வேலி
பொன்ரா மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை, திருநெல்வேலி
திருப்பூர்

ஸ்ரீ குமரன் மருத்துவமனை, திருப்பூர்
ரேவதி மெடிக்கல் சென்டர், திருப்பூர்
திருச்சி

ஜி.வி.என். மருத்துவமனை பிரைவேட் லிமிடெட், தேவதானம், திருச்சி
சிந்துஜா மருத்துவமனை, மணப்பாறை
மாருதி மருத்துவமனை, தென்னூர் , திருச்சி
வேலூர்/ திருப்பத்தூர்/ ராணிப்பேட்டை

ஸ்ரீ நாராயணி மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையம், வேலூர்
ஸ்கட்டர் மெமோரியல் மருத்துவமனை, ராணிப்பேட்டை
டாக்டர் தங்கம்மா மருத்துவமனை, திருப்பத்தூர்
விழுப்புரம்/ கள்ளக்குறிச்சி

ஐ மெட் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை, திண்டிவனம்
ஈ.எஸ். மருத்துவமனை, விழுப்புரம்
ஸ்ரீ சஞ்சீவி மருத்துவமனை, கள்ளக்குறிச்சி
மரகதம் மருத்துவமனை, விழுப்புரம்
விருதுநகர்

மீனாட்சி மெமோரியல் மருத்துவமனை, ராஜபாளையம்
ஸ்ரீ கிருஷ்ணா மருத்துவமனை, ராஜபாளையம்
சிட்டி மருத்துவமனை, அருப்புக்கோட்டை

Recommend For You

Post Top Ad