NEET தேர்வு : "அரசு பள்ளி மாணவர்களுக்கு சலுகை" முதல்வர் அதிரடி அறிவிப்பு ..!! - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Saturday, March 21, 2020

NEET தேர்வு : "அரசு பள்ளி மாணவர்களுக்கு சலுகை" முதல்வர் அதிரடி அறிவிப்பு ..!!






அரசு பள்ளியில் படித்து வரும் மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் சிறப்பு சலுகை வழங்கி முதல்வர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

நீட் தேர்வின் அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கை என்பது கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் பின்பற்றப்பட்டு வருகிறது. தமிழகத்தில் நீட்தேர்வு நடைமுறைப்படுத்தப்பட்ட பிறகு அரசு பள்ளி மாணவர்கள் எத்தனை பேர் நீட் தேர்வு மூலமாக அரசு மருத்துவ கல்லூரிகள் சேர்ந்தார்கள் என்ற ஒரு எண்ணிக்கை எடுத்த பார்த்தோமானால் கிட்டத்தட்ட 10 மாணவர்களுக்கும் குறைவாகத்தான் இருக்கிறது. கடந்த ஆண்டைப் பொறுத்தவரை இரண்டிலிருந்து மூன்று மாணவர்கள் தான் தேர்ச்சி பெற்றார்கள்.

மாணவர்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதனால் வெளிப்படையாக தமிழக அரசு எவ்வளவு மாணவர்களை அரசு பள்ளியில் பயின்று சேர்ந்தார்கள் என்று வெளியிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.



இத்தகைய சூழலில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஒரு நடைமுறையை கொண்டு வந்தால் அந்த மாணவர்களுக்கு கூடுதலாக இடம் கிடைப்பதற்கான வாய்ப்பு இருக்கிறது.


உதாரணமாக தனியார் நீட் பயிற்சி மையங்களில் தனியார் பள்ளிகளில் பயின்ற மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற்ற கூடிய சூழலில் அரசு பள்ளியில் படித்த மாணவர்களும் அதில் சேர்ந்து அவர்களோடு போட்டியிட வேண்டிய சூழல் உருவாவதால் அதிகமான அரசு பள்ளியில் மாணவர்களுக்கு இடம் கிடைக்காமல் போய் விடுகின்றது.

எனவே அரசு பள்ளி மாணவர்களுக்கென்று குறிப்பிட்ட அளவு(10 சதவீதம்) மருத்துவ படிப்பில் உள் ஒதுக்கீடு வைக்கலாமா ? என்ற ஒரு சட்ட திருத்தத்தை 114 விதியின் கீழ் முதல்வர் அறிவித்துள்ளார். இந்த இடங்களில் தனியார் பள்ளியில் பயின்ற மாணவர்கள் போட்டியிட முடியாது. எனவே அரசு பள்ளி மாணவர்களுக்கு அதிகமான இடம் கிடைக்கும் அதன் அடிப்படையில்தான் இந்த ஒதுக்கீட்டை கொண்டுவரலாம் என்ற ஒரு முடிவை எடுத்திருக்கிறார்கள்.

Post Top Ad