இந்த பழக்கங்களை உடனே விட்டு விடுங்கள். இல்லையேல் நிச்சயம் கொரோனா தாக்குமாம்! - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Tuesday, March 10, 2020

இந்த பழக்கங்களை உடனே விட்டு விடுங்கள். இல்லையேல் நிச்சயம் கொரோனா தாக்குமாம்!






இன்று உலக மக்களை அச்சுறுத்தும் வைரஸாக கொரானா வைரஸ் உருவெடுத்துள்ளது.சீனாவில் இருந்து உலகின் அனைத்து பகுதிகளிலும் இந்த கொரோனா வைரஸ் பரவியுள்ளது. இந்த பீதியில் மக்கள் வெளியில் செல்லாமல் வீட்டிலேயே முடங்கி கிடக்கின்றனர்.ஏனெனில் இந்த வைரஸ் பலவீனமான நோயெதிர்ப்பு அமைப்பைக் கொண்டவர்களைத் தான் விரைவில் தாக்குகிறது.

எனவே கொரோனா வைரஸின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க நினைத்தால், நோயெதிர்ப்பு மண்டலத்தின் சக்தியை அதிகரிக்க வேண்டும்.அந்தவகையில் தற்போது ஒருவரது நோயெதிர்ப்பு மண்டலத்தை பலவீனமாக்கும் பழக்கங்கள் எவையென்று பார்ப்போம்.ஒருவரது நோயெதிர்ப்பு மண்டலத்தில் பெரிய தாக்கத்தை மன அழுத்தம் ஏற்படுத்தும் நீங்கள் மன அழுத்தத்தில் இருப்பது போன்று உணர்ந்தால், உடனே அதைப் போக்கும் முயற்சியில் ஈடுபடுங்கள்.மோசமான உணவுகளை ஒருவர் அடிக்கடி உட்கொண்டு வந்தால், அது பலவீனமான நோயெதிர்ப்பு மண்டலத்திற்கு வழிவகுத்து, அடிக்கடி நோய்வாய்ப்படச் செய்யும்.
எனவே இந்த பழக்கத்தை கைவிடுவது நல்லது.தற்போது வைரஸ் பரவி வருவதால், முடிந்தவரை வீட்டிலேயே ஆரோக்கியமான உணவை சமைத்து சாப்பிடும் பழக்கத்தைக் கொள்ளுங்கள். மேலும் பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள் போன்றவற்றை அதிகம் உணவில் சேர்த்து வாருங்கள்.

உங்களுக்கு மது பழக்கம் இருப்பின், அப்பழக்கத்தை முடிந்தவரை கைவிட முயற்சி செய்யுங்கள். ஏனெனில் ஆல்கஹாலையும் அதிகமாக உட்கொண்டால், அது உடலைத் தாக்கும் கிருமிகளை அழிக்கும் இரத்த வெள்ளையணுக்களின் திறனை குறைத்து, நோயெதிர்ப்பு சக்தியை பலவீனமாக்கிவிடும்.போதுமான தூக்கம் ஒருவருக்கு இல்லாவிட்டால், அது நோயெதிர்ப்பு மண்டலம் மீண்டும் கட்டமைப்பதற்கான வாய்ப்பு கிடைக்காமல், பலவீனமாவதற்கான வாய்ப்பு அதிகரிக்கும். எனவே போதுமான தூக்கம் வேண்டும்.உங்கள் உடல் எடையை எப்போதும் சரியான அளவில் பராமரித்து வர முயற்சி செய்யுங்கள். ஏனெனில் உடல் பருமன் பலவீனமான நோயெதிர்ப்பு மண்டலத்திற்கு வழிவகுக்கும்.ஒருவர் உடற்பயிற்சி செய்யாமல் இருந்தால், இந்த செயல்கள் தடைப்படும். எனவே தினமும் குறைந்தது 20 நிமிடம் உடற்பயிற்சியில் ஈடுபடுங்கள்.சில பரிந்துரைக்கப்பட்ட மற்றும் பரிந்துரைக்கப்படாத மருந்துகள், உடலில் நச்சுக்களின் அளவை அதிகரித்துவிடுவதோடு, அதிகமாக பயன்படுத்தும் போது, உடலின் நோயெதிர்ப்பு மண்டலத்தையும் பலவீனமாக்கும். ஆகவே அதிகளவு ஆன்டி-பயாடிக்குகளை எடுப்பதைத் தவிர்த்திடுங்கள்.

போதுமான சுகாதாரமின்மை உடலைத் தாக்கும் கிருமிகளின் அளவை அதிகரித்து, நோயெதிர்ப்பு மண்டலத்தை பலவீனமாக்கிவிடும். எனவே தினமும் தவறாமல் குளிப்பது போன்ற அடிப்படை சுகாதாரப் பழக்கங்களை தவறாமல் பின்பற்றுங்கள்.அதிகப்படியான கெமிக்கல் வெளிபாடு, புறஊதாக் கதிர்கள் மற்றும் கதிரியக்க வெளிபாடுகள் நோயெதிர்ப்பு மண்டலத்தைப் பாதித்து பலவீனப்படுத்திவிடும். எனவே இந்த பழக்கத்தை உடனே தவிர்த்திடுங்கள்.ஒருவர் அதிகமாகவோ அல்லது ஒன்று இரண்டோ சிகரெட் பிடித்தாலும் அல்லது புகைப்பிடிப்போரின் அருகில் இருந்து, அந்த புகையை சுவாசித்தாலும், நோயெதிர்ப்பு மண்டலம் பலவீனமாகும். எனவே இந்த பழக்கம் இருந்தால், உடனே கைவிடுங்கள்.உடலில் போதுமான நீர்ச்சத்து இல்லாமல் இருந்தால், உடலில் நச்சுக்கள் ஆங்காங்கு தேங்கி, கிருமிகளை எதிர்த்துப் போராடும் நோயெதிர்ப்பு மண்டலத்தை தான் முதலில் பாதிக்கும். எனவே தினமும் தவறாமல் போதுமான நீரைப் பருகும் பழக்கத்தைக் கொள்ளுங்கள்.


Post Top Ad