துப்புரவாளர் பணியில் சேர்ந்த எம்.எஸ்சி. மாணவி! - Asiriyar.Net

Post Top Ad


Saturday, March 7, 2020

துப்புரவாளர் பணியில் சேர்ந்த எம்.எஸ்சி. மாணவி!


எம்.எஸ்.சி. படித்த மாணவி கோவை மாநகராட்சியில் துப்புரவாளர் பணியில் சேர்ந்துள்ளார். ''படித்திருக்கிறேன் என்பதால் துப்புரவு வேலை செய்யமாட்டேன் என்பது இல்லை. எந்த வேலையாக இருந்தாலும் செய்வேன்''என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.


கோவை மாநகராட்சியில் காலியாக உள்ள 549 துப்புரவு பணியாளர் பணியிடங்களை நிரப்ப மாநகராட்சி சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்த வேலைக்காக பி.எஸ்சி., பி.காம்., பி.இ. படித்த பட்டதாரிகள் உள்பட 7,300 பேர் விண்ணப்பித்து இருந்தனர். இட ஒதுக்கீடு அடிப்படையில் அவர்களது விண்ணப்பம் பரிசீலிக்கப்பட்டது. இதில், 321 பேருக்கு துப்புரவு தொழிலாளர் பணிநியமன உத்தரவு வழங்கும் நிகழ்ச்சி குனியமுத்தூரில் உள்ள மாநகராட்சி தெற்கு மண்டல அலுவலகத்தில் நடந்தது.

அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கலந்து கொண்டு புதிய துப்புரவு தொழிலாளர்களுக்கு பணிநியமன ஆணையை வழங்கினார்.

கோவை தெலுங்குபாளையத்தை சேர்ந்த மோனிகா(23) என்ற எம்.எஸ்சி. படித்து வரும் மாணவிக்கும் துப்புரவு பணியாளர் வேலைக்கான ஆணை வழங்கப்பட்டது.


Recommend For You

Post Top Ad